Rear Facing Airplane Seat-ஐ தேடி போய் வாங்கும் பிசினஸ் மேன்கள்... இத்தன நாளா இது தெரியாம போச்சே!

பெரும்பாலான விமானங்களில் முன் பக்கத்தை பார்த்தவாறு மட்டுமே இருக்கைகள் இருக்கும். பின் பக்கத்தை பார்த்தவாறு இருக்கைகள் இருக்காது. இதைக் காண்பதும் அரிது. ஒரு சில முன்னணி விமான நிறுவனங்களின் பிசினஸ் கிளாஸில் மட்டுமே பின் பக்கத்தை பார்த்தவாறு அமைந்திருக்கும் இருக்கைகளை நம்மால் காண முடியும்.

உதாரணமாக நிப்பான் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர்வேஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், எடிஹட், கத்தார் மற்றும் யுனைடெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமானங்களில் பின் பக்கத்தை பார்த்தவாறு இருக்கையை நம்மால் காண முடியும். இந்த இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும்போதே முற்றிலும் வித்தியாசமான பயண உணர்வை பெற முடியுமாம்.

Rear facing seats

விமானத்தில் அடிக்கடி பயணிப்பவர்கள் சிலர் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இவர்கள் வழங்கிய புள்ளி விபரங்களின்படி, பலர் விமானத்தில் பின் பக்கத்தை பார்த்தவாறு இருக்கும் இருக்கைகளில் பயணிக்கவே அதிகம் விரும்புகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. அப்படி என்ன இருக்கு அந்த அந்த இருக்கையில், ஏன் இதை பலர் விரும்புகின்றனர் என்பது சுவாரஷ்ய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உங்களால் மிக சிறந்த காட்சிகளை காண முடியும்: பூமியை விட்டு பல அடி உயரம் விமானங்கள் பறக்கும். அவ்வாறு பறந்துக் கொண்டிருக்கும்போது இந்த பூமியின் உண்மையான அழகை உங்களால் பரந்தளவில் பார்த்து ரசிக்க முடியும். இதைமட்டுமில்லைங்க, பின்னோக்கிய இருக்கையில் அமரும்போது விமானத்தின் இறக்கைகளையும், அதில் இருக்கும் பிரமாண்ட எஞ்ஜினையும் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும்.

Rear facing business class seats

குறிப்பாக, விமானிகள் விமானங்களை திருப்பும்போது ரெக்கைகள் இயங்கும் விதத்தையும், எஞ்ஜின்களில் உள்ள விசிறிகள் ஓயாமல் சுழன்றுக் கொண்டிருப்பதையும் காண முடியும். ஆனால், இந்த காட்சிகளை எல்லாம் முன்னோக்கி பார்த்தவாறு இருக்கும் இருக்கைகளில் காண முடியாது. இந்த காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் தங்களுக்கு அது புதிதுபோல் தெரிவதாக பின் நோக்கிய இருக்கையை நேசிக்கும் விமான பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தூங்குவதற்கு ஏற்றது: பொதுவாக விமானங்கள் இரண்டு டிகிரி கோணத்தில் ஏற்றமாக இருக்கும். அவை இறங்கும் போது மட்டுமே விமானத்தின் மூக்கு பகுதி முழுவதுமாக கீழ் நோக்கியவாறு இருக்கும். இந்த மாதிரியான நேரத்தில் பின்னோக்கி பார்த்து இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தால் நீங்கள் எந்த விதமான அசௌகரியமான உணர்வையும் உணர மாட்டீர்கள். உங்கள் இருக்கையை மிக லேசாக சாய்த்து வைத்திருந்தாலே நீங்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

Rear facing business class luxury seats

ஃபன் ரைடு அனுபவம்: ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் பயணிகள் விமானங்களில் பயணிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே பின் நோக்கி பார்த்தவாறு இருக்கும் இருக்கையை விரும்பி தேர்வு செய்கின்றனர். அந்த இருக்கையில் விமானங்கள் டேக்-ஆஃப் ஆகும்போதும், தரையிறங்கும்போதும் தனித்துவமான உணர்வை வழங்கும் என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே அந்த இருக்கையை தேர்வு செய்வார்கள் என பின்னோக்கிய இருக்கையை அதிகம் விரும்பக் கூடியவர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர்.

அடிக்கடி அந்த இருக்கையில் அமர்ந்து பயணித்தாலும், ஒவ்வொரு பயணமும் சுவாரஷ்யமானதாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். சிலர் உற்சாகமான உணர்வை அல்லது சிரிப்பை ஏற்படுத்தும் உணர்வை இந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது பெற்று இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதனாலேயே பிசினஸ் கிளாஸ் விமான பயணிகள் சிலர் பின்னோக்கிய இருக்கைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் இந்த இருக்கை விரும்பாமல் இருக்கலாம். ஆனால், இருக்கையில் நல்ல காட்சிகளையும், நல்ல உறக்கத்தையும், ஃபன்னான ரைடு அனுபவத்தையும் பெற முடியும் என அந்த இருக்கையை அதிகம் பயன்படுத்தியவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், இது எந்த அளவு சாத்தியம் என்பதை எங்களால் உறுதியாக கூற முடியவில்லை. நீங்கள் இதுபோன்று பின்னோக்கிய இருக்கையை இதற்கு முன்னதாக பயன்படுத்திருந்தீர்கள் என்றால், எங்களுக்கு அந்த அனுபவம் பற்றிய தகவலை கமெண்டாக தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 22, 2023, 15:12 [IST]
English summary
Rear facing airplane seat interesting facts
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X