டிரைவர் டீசல் செலவை மிச்ச பண்ண நினைத்தது தான் குன்னூர் விபத்துக்கு காரணமா? 9 பேரின் உயிரை காவு வாங்கியதா?
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பேருந்து கவர்ந்து 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையிலிருந்து சுற்றுலா பேருந்து கீழே இறங்கும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து நிகந்துள்ளது. இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேச பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியது. இதே போல தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு பஸ் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் ஊட்டியில் சுற்றுலாவை முடித்துவிட்டு சரியாக நேற்று மாலை ஊட்டியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். பஸ் மரப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு திருப்பத்தில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே விழுந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 54 பயணிகளும் கோர விபத்தில் சிக்கினார். பயணிகளில் ஆறால் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அப்போதைக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்டு கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஒன்பது பயணிகள் உயிரிழந்துள்ளனர் பலர் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்களில் எல்லாம் நிறுத்தப்பட்டு நேற்று இரவு ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன.

இந்த பஸ் விபத்தில் சிக்கியது எப்படி என பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணைக்கு பின் உண்மையான நிலவரம் தெரியவரும் என்றாலும், இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறிய கருத்துக்களை வைத்து பார்க்கும் போது பஸ்ஸிக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவு நம்மால் கணிக்க முடிகிறது.
சம்பவத்தின்படி பஸ் ஊட்டி மலையிலிருந்து கீழே இறங்கி உள்ளது விபத்து சரியாக ஒரு திருப்பத்தில் பஸ் திரும்பும் போது ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மூன்று விதமான காரணங்களுக்காக பஸ் விபத்தில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. முதல் காரணம் பஸ் அதிகமான வேகத்தில் வந்து திருப்பத்தில் டிரைவர் பஸ்சை கட்டுப்படுத்த முடியாமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கலாம்.

2 வது காரணம் பஸ் மலையிலிருந்து இறங்கி கொண்டிருக்கும் போது விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு முன்னர் டிரைவர் அதிகமாக பிரேக்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். இதனால் பஸ்ஸின் பிரேக் டிரம் அதிக சூடாகி அதன் தன்மையை இழந்திருக்கும். பிரேக் பிடிக்கும் திறனை இழந்திருக்கும்.
இந்த நேரத்தில் பஸ் வேகமாக வந்து திருப்பத்தின் அருகே நெருங்கும்போது டிரைவர் பஸ்ஸில் வேகத்தை குறைக்க பிரேக் பிடிக்க முயற்சித்து இருப்பார் அந்த நேரத்தில் பிரேக் சூடாக இருந்ததால் அது சரியாக வேலை செய்யாமல் பஸ் அதிக வேகத்தில் சென்று பள்ளத்துக்குள் கவிழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவது வாய்ப்பாக பஸ் திருப்பத்தில் விபத்தில் சிக்கி இருப்பதால் பஸ்ஸை திருப்புவதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம். உதாரணமாக பஸ்ஸின் ஸ்டேரிங் லாக்காகி இருந்திருக்கலாம் அப்படி லாக்காகி இருந்தது என்றால் பஸ் திருப்ப முடியாமல் நேராக சென்று பள்ளத்து கவிழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
முதல் காரணத்தின்படி பார்க்கும்போது பஸ் மேலிருந்து கீழே இறங்கும்போது அதிக வேகத்தில் செல்லும்படி பஸ்ஸின் டிரைவர் பஸ் இயக்கியிருக்கக் கூடாது. அதிக வேகத்தில் சென்றதால் தான் விபத்தில் சிக்கி இருக்கும். இரண்டாவது காரணத்தின்படி பஸ் பஸ்ஸில் ஏற்கனவே பிரேக் பிரச்சனை இருந்திருக்கும் இதை டிரைவர் மற்றும் பஸ் ஊழியர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.
சில நேரம் கவனித்து இருந்தாலும் எப்படியாவது மலையில் இருந்து கீழே இறங்கி விடலாம், எப்படியவாது நிலைமையை சமாளித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் டிரைவர் பஸ்ஸை இயக்கியிருக்கலாம். இந்த கவனக்குறைவால் கூட விபத்துகள் திறக்கலாம் மூன்றாவது காரணமான ஸ்டேரிங் லாக் என்பது அடிக்கடி டிரைவர்கள் கவனக்குறைவாக செய்யும் தவறான சில செயல்களால் ஆகும் பிரச்சினையாகும்.
அதாவது மலையிலிருந்து கீழே இறங்கும் போது பெரும்பாலான பகுதி இறக்கமாக இருப்பதால் பல வாகனத்தின் எரிபொருளை மிச்சப்படுத்துவதாக நினைத்து வாகனத்தை ஆஃப் செய்து விட்டு மலையிலிருந்து இறங்குவார்கள் இப்படியாக வாகனம் ஆஃப் செய்யப்பட்டால் ஸ்டேரிங் அல்லது பிரேக் லாக் போஷிஷனிற்கு சென்று விடும்.
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் இப்படி நிகழ்ந்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. டிரைவர் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக பஸ்ஸை ஆஃப் செய்து விட்டு தொடர்ந்து இறக்கத்தில் இறங்கி இருக்கலாம். அப்படி இறங்கி இருந்தால் பஸ்ஸின் ஸ்டேரிங் லாக்காகி இருக்கும். இதனால் பஸ்ஸை அவரால் திருப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்திருக்கலாம்.
குன்னூரில் நடந்த இந்த பஸ் விபத்தில் பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது 50 அடியில் ஒரு மரம் இருந்ததால் அந்த மரத்தில் பஸ் சிக்கி தப்பி கொண்டது அந்த மரம் மட்டும் இல்லை என்றால் அடுத்து மீண்டும் 150 அடி பஸ் உள்ளே சென்று இருக்கும் அப்படி சென்று இருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
பஸ் விபத்து குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய பஸ் மீட்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை இனி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து பஸ் ஏன் விபத்து சிக்கியது என்பதற்கான காரணத்தை கண்டறிவார்கள் மேலும் இந்த பஸ் பயணித்து வந்த பாதையில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரண ரோட்டில் வாகனம் ஓட்டுவதும் மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டுவதும் ஒன்று அல்ல. மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும். குறிப்பாக மலையிலிருந்து இறங்கும்போது அதிக கவனத்துடன் வாகனம் ஓட்டவில்லை என்றால் விபத்துக்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









