மயிரிழையில் உயிர் தப்பிய 36 பயணிகள்! வந்தே பாரத் ரயிலில் தீ பிடித்தது இப்படி தானா?

வந்தே பாரத் ரயில் ஒன்று தீப்பிடித்த சம்பவம் சமீபத்தில் ம.பியில் நடந்து உள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? புதிதாக கட்டமைக்கப்பட்ட ரயிலில் எப்படி தீ விபத்து நடந்தது? இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? இனி இது நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியாக போபால் முதல் நிஜாமுதீன் வரை ரயில் எண் 2017 என்ற வந்தே பாரத் ரயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை 5 40 மணிக்கு கோபாலில் இருந்து கிளம்பியது.

vande bharat fire incident

இந்த ரயில் சரியாக காலை 7:10 மணிக்கு குர்வாய் கேத்தோரா ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக இந்த ரயிலின் சி 14 பெட்டியில் அடியிலிருந்து தீ பிடித்துள்ளதை அப்பகுதியில் உள்ளவர் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கூச்சலிட்டு அந்த பெட்டிக்குள் இருந்தவர்களை எல்லாம் வெளியேற சொன்னார்கள்.

அந்த பெட்டிகள் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர் நல்ல வேளையாக தீப்பிடித்ததை முன்னரே கண்டதால் 36 பேரும் எந்தவித காயமும் இன்றி வெளியே வந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் பெட்டியில் இருந்த தீயை அணைத்தனர்.

vande bharat fire incident

இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விபத்து குறித்து நடவடிக்கைகளில் இறங்கினர் அதன்பின் இந்த ரயிலில் இருந்த அனைவரும் குறிப்பிட்ட ஸ்டேஷனிலேயே இறக்கிவிடப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் அதற்கு மேல் பயணிக்க முடியாமல் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்த ரயில் ஏற்பட்ட தீயை அணைக்க அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் உதவி செய்தனர். சி 14 பெட்டியில் சரியாக பேட்டரி இருக்கும் பகுதியில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பேட்டரியில் ஏற்பட்ட ஏதாவது கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ரயிலை பொருத்தவரை ஒவ்வொரு கோச்சிருக்கும் பேட்டரி கம்பார்ட்மென்ட் என்ற ஒரு பெட்டி இருக்கும்.

இதில் லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகுதான் இந்த பேட்டரிகள் எல்லாம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்படி இருந்தும் இந்த பேட்டரி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேட்டரியில் தீப்பிடிப்பதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தீ விபத்து நடந்த ரயிலுக்கு வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் எரிந்து அணைந்த பேட்டரியை எலெக்ட்ரிக்கல் லைனில் இருந்து கழட்டி எடுத்தனர். பேட்டரி இருக்கும் பகுதி ரயிலில் கீழ் பகுதியில் இருப்பதால் தீ ரயிலின் மேல் பகுதிக்கு பரவவில்லை இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பலரது உயிர் காப்பாற்றப்பட்டது.

பழுதான பேட்டரி நீக்கப்பட்ட பின்பு தீயெல்லாம் அணைக்கப்பட்ட பின்பு இந்த ரயில் தொடர்ந்து பயணிப்பதற்கு தயாரானது ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் தீப்பிடித்தவுடன் அதை அப்பகுதியில் இருந்த பயணிகள் பலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்கள் மக்கள் விரும்பி பயணிக்கும் ரயிலாக மாறிவரும் நிலையில் அதில் இப்படியான பேட்டரி தீ பிடிக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் வந்தே பாரத் குறித்த நம்பதன்மையை குறைத்துவிடும். இதனால் வருங்காலத்தில் வந்தே பாரத் ரயிலில் கூட்டம் குறைய வாய்ப்புகள் உள்ளது. ரயில்வே நிர்வாகம் இது போன்ற சம்பவம் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 16:16 [IST]
English summary
Reason behind the fire on bhopal delhi vande bharat express
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+