திடீர் திடீரென்று எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எரிய என்ன காரணம்? அதை எப்படித் தடுப்பது?
எலெக்டரிக் வாகனங்கள் தீ பிடித்து எரிய என்ன காரணம்? அதை எப்படித் தடுப்பது?
Recommended Video
இது குறித்த தெளிவான மற்றும் முழுமையான விளக்கத்தை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் எடுத்த பெயரும் முயற்சியின் காரணமாக இந்தியாவில் தற்போது ஒரு எலெக்டரிக் வாகன புரட்சியே துவங்கியுள்ளது எனச் சொன்னால் மிகையாகாது. அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் பெட்ரோல், டீசல் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசலுக்காக நாம் வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்துள்ளதால் அதை மாற்ற எலெக்டரிக் வாகனங்களை அதிகம் உருவாக்குவது குறித்து மத்திய மாநில அரசுகள் எடுத்த முடிவில் இன்று எலெக்ட்ரிக் வாகன விற்பனை நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு கேட்டகிரியில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் உயிரிழப்புகளும் நடந்து வருவதால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கச் சற்று தயங்கி வருகின்றனர். இருந்தாலும் எலெக்டரிக் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் உள்ள இந்த பயம் போனால் தான் எலெக்டரிக் வாகனங்களின் விற்பனை உச்சத்திற்குச் செல்லும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த பதிவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏன் தீப்பிடிக்கின்றன. அதை எப்படித் தடுப்பது, அதைத் தடுப்பதில் இருக்கும் பிரச்சனை என்ன விரிவாகக் காணலாம்

எலெக்டரிக் வாகனங்கள் அனைத்தும் பேட்டரி பவரில் இயங்கும் திறன் கொண்டது. பேட்டரியை பயன்படுத்தப் பயன்படுத்த சார்ஜ் ஏற்ற வேண்டும். அப்படியாக சார்ஜ் ஏற்றப்படும் போதும், அல்லது ஸ்கூட்டர் பயன்பாட்டிற்காக சார்ஜை பேட்டரி வழங்கும் போது பேட்டரி சூடாகும்.

அதில் லித்தியம் அயான் பேட்டரி அதிகமாகச் சக்தியை வழங்கும் திறன் கொண்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும்பாலும் இந்த பேட்டரியையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதன் விலை அதிகம். சில விலை குறைந்த ஸ்கூட்டர்களில் மட்டும் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

இப்படியான முறையில் பேட்டரி சூடாவதை தடுக்க லிக்யூட் கூலிங் டொக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இதனால் பேட்டரி குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெப்பம் ஆவதை தடுக்கிறது. இதற்காக தெர்மல் பேட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தெர்மல் பேட்கள் மூலம் பேட்டரியின் வெப்ப நிலையை ரியல்டைமில் கண்டறிந்து உடனிடியாக அதை குளிர்விக்கும் பணி ஆட்டோமேட் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேலை பேட்டரி 55-65 டிகிரி செல்சியஸிற்கு மேல் கூடாகிவிட்டால் பேட்டரியிலிருந்து கேஸ் வெளியாகி பின்னர் தீப்பிடிக்கத் துவங்கிவிடும். அதன்பின்னர் அதைத் தடுப்பது கடினம். அதனால் பேட்டரியை கூடாக விடாமல் தடுப்பது முக்கியம். நாம் மேல் சொன்னது பேட்டரியை சூடாக விடாத ஒரு தொழிற்நுட்பம் எனில் மற்றொரு தொழிற்நுட்பம் பேட்டரியை ஒன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.

அதன்படி தெர்மல் பேட் மூலம் பேட்டரியின் பயன்பாட்டை அறிந்து உடனடியாக பேட்டரியின் செயல்பாட்டை முழுவதுமாக அந்த தொழிற்நுட்பம் நிறுத்திவிடும். உதாரணமாக ஸ்கூட்டர் சார்ஜ் ஏறும் போது பேட்டரி சூடானால் சார்ஜ் ஏற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிடும். ஸ்கூட்டர் பயன்பாட்டின் போது சூடானால் பவர் டெரைனிற்கு பவர் கொடுப்பதை நிறுத்திவிடும்.

பேட்டரி அதிக சூடாவதைத் தடுக்க பலர் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் பேட்டரியின் செல்களின் அடுக்கும் வடிவத்தை மாற்றியமைத்து முயன்று வருகின்றனர். சிலர் செல்களின் அளவுகள் மற்றும் தரங்களை மாற்றியமைத்து பேட்டரி சூடாகும் விஷயத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

பேட்டரிகளை பொருத்தவரை பேட்டரி சூடானால் அதன் திறன் குறையும், ஆயுளும் குறையும். இப்படியும் ஒரு பிரச்சனை இரப்பதால் இந்த பிரச்சனைக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. அதாவது தற்போது பயன்பாட்டில் இருக்கும் தொழிற்நுட்பம் 99 சதவீதம் பாதுகாப்பானது தான் என்றாலும் மீதி உள்ள 1 சதவீதத்தையும் பாதுகாப்பாக மாற்றத்தான் இந்த ஆய்வுகள் எல்லாம் நடக்கிறது.

பேட்டரி எரியும் சம்பவத்தில் முக்கியமான 99 சதவீத காரணம் பேட்டரியின் தயாரிப்பு மற்றும் உருவாக்கத்தில் இருக்கிறது. மீதி 1 சதவீதம் மட்டுமே அதன் பயன்படுத்தும் பயனர்களின் பராமரிப்பில் இருக்கிறது. விரைவில் இந்த பேட்டரிக்கான தரக்கட்டுப்பாடுகள் இந்தியாவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications