பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

சமீப காலத்தில் பெட்ரோல் பம்ப்கள், பஞ்சர் பார்க்கும் இடங்களில் நைட்ரஜன் ஏர் என்று ஒன்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். நைட்ரஜன் ஏரை பிடித்தால் தான் டயருக்கு நல்லது சிலர் கூறுவதை கூட கேட்டிருப்போம்.

சமீப காலத்தில் பெட்ரோல் பம்ப்கள், பஞ்சர் பார்க்கும் இடங்களில் நைட்ரஜன் ஏர் என்று ஒன்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். நைட்ரஜன் ஏரை பிடித்தால் தான் டயருக்கு நல்லது சிலர் கூறுவதை கூட கேட்டிருப்போம். இங்கே அந்த நைட்ரஜன் ஏர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும்.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

ஆனால் நைட்ரஜன் என்பது முழுவதும் நைட்ரஜன் காற்றால் ஆனது. இது டயரின் சில தன்மைகளை மாற்றியமைக்கும். முக்கியமாக இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் கிடைக்கும் நன்மைகளையும், அதன் பயன்களையும் குறித்து கீழே பார்க்கலாம் வாருங்கள்

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

பிரஷர் குறையாது

சாதாரண காற்றில் உள்ள 28 சதவீதமும் 1 சதவீத காற்றும் அதிக சூடு மற்றும் பல்வேறு காரங்களுக்காக வெளியே வாய்புள்ளது. இதனால் டயரில் உள்ள பிரஷர் குறையும். ஆனால் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறைப்பது குறைவு.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

துல்லியமான பிரஷர்

நவீனமாக நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்காக வந்துள்ள மிஷின்கள் டயரின் பிரஷர் அளவை மிக துல்லியமாக கணக்கிடுகின்றன. சாதாரண ஏர் பிடிக்கும் எந்திரங்களில் இந்த அளவு துள்ளியம் இருப்பதில்லை. இதனால் உங்கள் டயருக்கான துள்ளியமான பிரஷர் கிடைக்கும்.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

துரு பிடிக்காமல் இருக்கும்

முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடித்தல் ஏற்படாது. அதே நேரத்தில் சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ரிம்மில் உள்ள இரும்பு ஈரமாகும் சமயங்களில் டியூப்பையும் தாண்டி ரிம்மில் உள்ள இரும்புடன் ரியாக்ட் ஆகி விரைவில் துரு பிடிக்கும்.

பைக் டயரில் சாதாரண ஏர் பிடிப்பதற்கும் நைட்ரஜன் ஏர் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

டயர் வாழ்நாள் அதிகரிக்கும்

நைட்ரஜன் காற்று முழுமையாக இருந்தால் பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளம். இதனால் டயரின் வாழ்நாள் என்பது அதிகரிக்கும்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

இந்த அவசர உலகில் பாதுகாப்பு, எளிமையான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் ட்யூப்லெஸ் டயர்கள் முன்னிலை பெற்றுள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் இக்கால கட்டத்ததில் விபத்துக்களின் எண்ணிக்கையை ட்யூப்லெஸ் டயர்கள் கணிசமாக குறைத்து வருகின்றன. இந்த டயர்களின் சாதகங்கள், ட்யூப் டயரை ட்யூப்லெஸ் டயராக மாற்றலாமா போன்ற தகவல்களை பார்க்கலாம்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப்லெஸ் டயர்களில் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருப்பது, பஞ்சர் ஆனால் கூட சிறிது தூரம் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். அதாவது, உடனடியாக டயரில் காற்றழுத்தம் குறையாது. அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் செல்லும் வரை வண்டியை ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனால், நடுவழியில் நின்று அவதிப்படுவதை தவிர்க்கிறது. குறிப்பாக, ஸ்கூட்டர், காரை ஓட்டிச் செல்லும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப்லெஸ் டயர்கள் பாதுகாப்பில் மட்டுமல்ல, கார், பைக்கிற்கு சிறந்த கையாளுமையை வழங்கும். உட்புறத்தில் ட்யூப் இல்லாத காரணத்தால், ஸ்டீயரிங் வீல் ஓட்டுவதற்கு மென்மையாகவும், இலகுவான உணர்வையும் வாகன ஓட்டிக்கு வழங்கும். இதனால், ஓட்டுனரின் அயர்ந்து போவதை தவிர்க்கிறது.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப்லெஸ் டயர்களில் காற்றழுத்தம் சீராக இருக்கிறது. மேலும், ட்யூப் டயர்கள் போன்று உடனடியாக குறையாது என்பதும், மற்றொரு மிகப்பெரிய சாதக விஷயம், ட்யூப் டயர்களை விட சற்றே அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். உராய்வு குறைவதால், வாகனத்தின் எரிபொருள் அதிகரிக்கிறது.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப் டயர்கள் பஞ்சர் ஏற்பட்டால் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று சக்கரத்தை கழற்றி மாட்டிதான் பஞ்சரை சரி செய்ய இயலும். ஆனால், ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஏற்பட்டாலும் சக்கரத்தை கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. தண்ணீரை ஸ்பிரே செய்து பஞ்சரை கண்டறிந்து அப்படியே பஞ்சரை சரிசெய்துவிட முடியும்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப் டயர் பஞ்சரானால் நடுரோட்டில் உதவிக்கு கூட ஆள் இல்லாமல் கழற்றி மாட்ட வேண்டி இருக்கலாம். டூ வீலராக இருந்தால் நிலைமை இன்னும் சிக்கல். ஆனால், ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஒட்டுவதற்கு அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று செய்யும்போது நேரம் விரயமாவதும் தவிர்க்க முடியும்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்டும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ரிம்மில் பாதிப்பு ஏற்பட்டால், காற்றழுத்தம் குறைந்து கொண்டே இருக்கும். எனவே, ரிம் பாதிக்கப்படாத வகையில் ஓட்டுவதும், பராமரிப்பதும் அவசியம்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

இன்று டூவீலர் வைத்திருக்கும் பலர் ட்யூப் டயருக்கு பதிலாக ட்யூப்லெஸ் டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஸ்போக்ஸ் வீல் என்றாலும், அலாய் வீல் என்றாலும் அதன் ரிம் அமைப்பு ட்யூப்லெஸ் டயருக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே மாற்றவும். சிலர் சொல்வது போல, டேப் போட்டு ஒட்டிவிட்டு ட்யூப்லெஸ் டயரை போட வேண்டாம்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ரிம் அமைப்பு சரியில்லாமல் ட்யூப்லெஸ் டயரை மாற்றினால், சில சமயம் விபத்துக்கு வழி ஏற்படுத்தி விடும். எனவே, மிக கவனமாக இதில் முடிவு எடுக்கவும். பலர் ட்யூப்லெஸ் டயரை மாற்றலாம் என்று கூறினாலும்,கைதேர்ந்த மெக்கானிக்கிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ரிம்முடன் சேர்த்து மாற்றினால் மட்டுமே பலன் தரும்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப்லெஸ் டயருக்குள் ட்யூப் போடுவதும் இப்போது சிலர் செய்கின்றனர். இதுவும் தவறான விஷயம்தான். இது தேவையில்லாத உராய்வு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனையும் செய்யாதீர்கள். ட்யூப் டயருக்கும், ட்யூப்லெஸ் டயருக்குமான கட்டமைப்பு, கட்டுமானம் ஆகியவை முற்றிலுமே வேறானது என்பதை மனதில் வையுங்கள்.

ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?

ட்யூப் டயரைவிட ட்யூப்லெஸ் டயர்கள் சற்று விலை அதிகம். எனினும், காரின் செயல்திறன், மைலேஜ், பாதுகாப்பு, எளிதான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் சிறப்பான மதிப்பை தருகின்றன. அதேநேரத்தில், ட்யூப்லெஸ் டயர் இருந்தால் தினசரி ஒருமுறை பரிசோதிப்பது நல்லது. காற்றழுத்தம் சற்று குறைந்தாலும் பஞ்சர் இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துவிட்டு வெளியில் எடுத்துச் செல்லுங்கள்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

புதிய கார் வாங்கி முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் தேனிலவு காலம்தான். எந்த பிரச்னையும் இல்லாமல் கார் உங்களது துணைவி போல துணை நிற்கும். அதற்கு பிறகு சரியான பராமரிப்பில் இல்லை என்றால் காலை வாரிவிட்டுவிடும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

முதல் மூன்று ஆண்டுகள் வரை சரியான இடைவெளியில் எஞ்சின் ஆயில், கூலண்ட் மாற்றுவது, வீல் அலைன்மென்ட், வீல் பேலன்சிங் செய்வதுடன், பிரேக் சிஸ்டம், ஏசி சிஸ்டத்தை பரிசோதிப்பது போன்ற வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிருக்கும். இந்த பராமரிப்பு செலவுகள் பெரும்பாலும் தெரிந்த விஷயம் என்பதாலும், கை கடிக்கும் அளவுக்கு பட்ஜெட் இருக்காது.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

ஆனால், கார் 35,000 கிமீ தூரம் ஓடிய பிறகு நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் காரின் டயர்கள். இது சற்று அதிக செலவு வைக்கும் விஷயம் என்பதால், பலர் அக்கறை காட்ட தவறுகின்றனர். இது அவர்களின் உயிருக்கும், குடும்பத்தாரின் உயிருக்கும் உலை வைத்துவிடும் விஷயமாகிவிடுகிறது.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியத்தை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும் முறை மற்றும் சாலை நிலையை பொறுத்து 35,000 கிமீ முதல் 40,000 கிமீ தூரத்திற்குள் காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியம் ஏற்படும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

பொதுவாக, பார்த்தவுடனே சிலர் காரின் டயர் தேய்மானத்தை கண்டறிந்து விட முடியும். ஆனால், புதிய கார்களில் சிலவேளை, பட்டன்கள் அதிகம் தேய்ந்து போயிருக்காது. ஆனால், கைகளை வைத்து தேய்க்கும்போது தோசைக்கல் போல வழுவழுப்பாக இருக்கும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

இதுபோன்ற டயர்களை வைத்து ஓட்டும்போது விபத்து அபாயம் அதிகம் ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றுதான். பிரேக் பிடிக்கும்போது டயர்களுக்கும் சாலைக்கும் சரியான பிடிப்பு இல்லாமல் வழுக்கிக் கொண்டு சென்று விபத்தில் சிக்கிவிடும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

வேகமாக செல்லும்போது பிரேக் பிடிக்கும்போது கார் நிற்கும் தூரமானது 20 மீட்டர் வரை அதிகமாகும். இதனால், வேகத்தில் செல்லும்போது நிச்சயம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை கொடுத்துவிடும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

அதுமட்டுமல்ல, காரின் பட்டன்கள் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, டயர் இடுக்கில் காற்றோட்டதையும் வழங்குகிறது. இதனால், டயர்கள் வெப்பமடைவது குறைக்கப்படும். ஆனால், தோசைக்கல் டயர்களில் பட்டன்கள் இடைவெளி இல்லாமல் காற்றோட்டம் இல்லாமல் சீக்கிரமாக சூடாகி வெடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

பொதுவாக டயர்களில் பட்டன்கள் 1.5 மிமீ இருக்கும்போதே டயர் மாற்றிவிடுவது பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். குறிப்பாக மழை காலங்களில், 1.5 மிமீ அளவுக்கு குறைவான பட்டன்கள் கொண்ட டயர்கள் போதிய பிடிப்பை அளிக்காது.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

அதுமட்டுமின்றி, ஸ்டீயரிங் சிஸ்டத்தின் திருப்புதல் திறனிலும் பாதிப்பு ஏற்படும். இதனால், கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. டயர் மாற்றுவதன் அவசியத்தை காரை ஓட்டும்போது ஒரு எளிய விஷயத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம். நெடுஞ்சாலையில் செல்லும்போது ஸ்டீயரிங் வீலின் திருப்புதல் திறன் துல்லியமாக இல்லாதது போல உணர்ந்தால், தோசைக்கல் டயர்களால் கூட இருக்கலாம்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

மேலும், ஸ்டீயரிங் வீலில் சிறிய அளவில் அலைபாய்வது போல ஒரு உணர்வு தோன்றினாலும் டயர்களை பரிசோதிப்பது நல்லது. உங்களது கார் டயர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அது ஸ்டீயரிங் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக எடுத்துக் கொண்டு பரிசோதிப்பது நல்லது.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

கார் ஓடிக்கொண்டிருக்குபோது அதிக உதறல்கள், அதிர்வுகள் தெரிந்தாலும் டயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து கொள்ளுங்கள். டயரில் லேசாக பட்டன் இருக்கிறது, கொஞ்சம் ஓட்டியபிறகு மாற்றலாம் என்று நினைப்பது தவறாக முடிந்துவிடும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

கார் வாங்கி 5 ஆண்டுகள் ஆன நிலையில் வெறும் 25,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள். அதுபோன்ற கார்களிலும் டயரில் அதிக தேய்மானம் இல்லாவிட்டாலும், ஆயுட்காலத்தை தெரிந்து கொண்டு மாற்றிவிடுவது அவசியம்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

மேலும், சைடு வால் எனப்படும் டயரின் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தால் அது அதிக தேய்மானம் இல்லாத டயராக இருந்தாலும், உடனடியாக மாற்றிவிடுவது அவசியம். டயர்களில் தயாரிப்பு குறைபாடு இருந்தால் வாரண்டியில் மாற்றிவிடலாம். பொதுவாக இரண்டு ஆண்டுகள் டயர்களுக்கு வாரண்டி பீரியட் இருக்கும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

விலை குறைவாக இருக்கிறதே என்று தரமற்ற டயர்களை வாங்கி மாட்ட வேண்டாம். தரமான, நீடித்த உழைப்பை தரக்கூடிய டயர்களை வாங்கி பொருத்துங்கள். ஏனெனில், இது உயிருடன் விளையாடும் விஷயமாகிவிடும்.

டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

இந்த செய்தியை படித்தவுடனே உங்களது காரின் டயரை பரிசோதித்து விடுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் அல்லது டயர் விற்பனை நிலையங்களை அணுகி உங்களது டயர்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Reasons Why Filling Nitrogen In Bike Tyres Is Beneficial. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X