என்ன பெரிய ஆட்டோமேட்டிக்... ஒரு சிலர் இன்னமும் மேனுவல் கியர் பாக்ஸ் காரைதான் விரும்பி ஓட்றாங்க... ஏன் தெரியுமா
ஆட்டோமொபைல் துறையில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
Recommended Video
இந்த சூழலில் ஆட்டோமேட்டிக் வந்த பிறகும் கூட, ஒரு சிலர் இன்னமும் ஏன் மேனுவல் கியர் பாக்ஸ் கார்கள் மீது பைத்தியமாக இருக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களின் (Automatic Gearbox Cars) ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை (Manual Gearbox Cars) ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. அதற்காக மேனுவல் கியர் பாக்ஸ் கார்களின் சகாப்தம் வெகு விரைவில் முடிவுக்கு வந்து விடும் என யாரும் நினைத்து விட வேண்டாம்.

ஏனெனில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களுக்கு இன்னமும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் சாதாரண ரசிகர்கள் கிடையாது. தீவிர ரசிகர்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுவதை விட, மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுவதைதான் அவர்கள் விரும்புகின்றனர். மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை அவர்கள் நேசிப்பதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்த செய்தி விரிவாக அலசுகிறது.

மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டினால் முழுமையான 'கண்ட்ரோல்' கிடைக்கும். கார் ஓட்டும்போது முழு கண்ட்ரோலும் உங்களிடம் இருக்க வேண்டும் என விரும்பினால், மேனுவல் கியர் பாக்ஸ்தான் உங்களுக்கு ஏற்றது. கார் ஓட்டும்போது தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்ட பிறகு, கியரை எப்போது மாற்ற வேண்டும்? என்பதை நீங்களே சுயமாக தீர்மானிக்க மேனுவல் அனுமதிக்கிறது.

மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களை போன்று, நீங்கள் கம்ப்யூட்டரை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. இது மேனுவல் கியர் பாக்ஸ் கார்களின் மிகப்பெரிய பலம். அதேபோன்று மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை பராமரிப்பதும் கூட மிகவும் எளிமையான விஷயமாக இருக்கும்.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களில், 'ப்ளூயிட்' (Fluid) மற்றும் 'பில்டர்' (Filter) ஆகியவற்றை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மேனுவல் கார்களில் அப்படி கிடையாது. எனவே மேனுவல் கார்களுக்கு குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இது உங்கள் செலவு மற்றும் பொன்னான நேரம் ஆகியவற்றை குறைக்கும் விஷயமாக இருக்கும்.

இதுதவிர அதிக சக்தி கிடைக்கும் என்பதும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ள கார்களில் இன்ஜின் தனது சக்தியை சிறிதளவு இழந்து விடும். ஆனால் மேனுவல் கியர் பாக்ஸ்கள், இன்ஜின் உருவாக்கும் சக்தியை டயர்களுக்கு முழுமையாக அனுப்பி விடும். இன்ஜின் உருவாக்க கூடிய சக்தி இடையில் எங்குமே இழக்கப்படாது.

இதுதவிர மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுவது என்பது, கார் டிரைவிங்கில் உங்களது திறமையை மற்றவர்களுக்கு எடுத்து காட்டுவதாகவும் இருக்கும். உண்மையில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களுடன் ஒப்பிடும்போது, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டுவது என்பது மிகவும் எளிமையான விஷயம்தான். எனவே ஆட்டோமேட்டிக் கார்களை யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்.

ஆனால் மறுபக்கம் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை எப்படி ஓட்டுவது? என்பது இன்றைய சூழலில் பலருக்கும் தெரிவதில்லை. எனவே மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்றால், அது உங்களை மற்றவர்களிடம் இருந்து கண்டிப்பாக தனித்து தெரிய செய்யும். மேனுவல் கியர் பாக்ஸ் மீது பலரும் பைத்தியமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்தான்.

கார்களை நேசித்து, பேரார்வத்துடன் ஓட்டுபவர்களிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் நிச்சயம் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களைதான் விரும்புவார்கள். அதேபோன்று ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இருக்கும் கார்களுடன் ஒப்பிடுகையில், மேனுவல் கியர் பாக்ஸ் கார்களின் விலை குறைவு என்பதும் கூட, பலரும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை தேர்வு செய்ய முக்கியமான காரணமாக இருக்கிறது.

மேனுவல் கியர் பாக்ஸ் இன்ஜின்கள் குறைவான நகரும் பாகங்களையே (Moving Parts) கொண்டிருக்கும். எனவே மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை குறைவான விலையில் வாங்கலாம். உங்கள் பட்ஜெட் குறைவாக இருக்கும் சூழலில், புத்தம் புதிய காரை நீங்கள் வாங்க விரும்பினால், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களை பரிசீலனை செய்யுங்கள். இதன் மூலம் கணிசமான பணத்தை நீங்கள் சேமிக்க முடியும்.

இதே காரணத்தால் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களின் பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும். மேனுவல் கியர் பாக்ஸ் இன்ஜின்களில் குறைவான நகரும் பாகங்கள் மட்டுமே இருக்கும் என்பதால், பழுது ஏற்பட்டாலும் கூட நீங்கள் குறைவான பாகங்களை மட்டுமே மாற்ற வேண்டியிருக்கும். எனவே பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்கள்தான் ஏற்றது.


Click it and Unblock the Notifications








