அவரை போலவே காரையும் அழகானதாக வாங்கிய டிவி சீரியல் நடிகை! டெலிவிரி எடுத்ததும் ஹைவேயில் செம்ம ஸ்பீடு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து புதியதாக பி.இ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. இதனாலேயே இந்த கார்களை செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே டெலிவிரி பெற்று வருவதை பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், பிரபல டிவி சீரியல் நடிகை (TV Serial Actress) ஒருவர் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.
ரெபேக்கா சந்தோஷ் (Rebecca Santhosh), கேரளாவின் திரிச்சூரில் பிறந்த 26 வயதான டிவி சீரியல் நடிகை. தமிழ் சீரியல்களில் இவரை பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், இவர் முழுக்க முழுக்க மலையாள டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். 2011ஆம் ஆண்டில் தனது 13ஆம் வயதிலேயே டிவி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவருக்கு 2016ஆம் ஆண்டில் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை இறுக்க பிடித்துக் கொண்ட ரெபேக்கா சந்தோஷ், அதன்பின் பிசியாக பல டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீப காலமாக 'ரேவதி' என்கிற கதாபாத்திரம் ரெபேக்காவுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது தலைக்காட்டும் ரெபேக்கா சந்தோஷ், சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ரெபேக்கா சந்தோஷ் கதாநாயகியாக நடித்த முதல் & கடைசி திரைப்படமான 'ஸ்னேகாக்கூடு' 2018இல் வெளிவந்தது. அதன்பின் எந்தவொரு திரைப்பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், 2020ஆம் ஆண்டு முதல் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். 2022இல் ரெபேக்கா சந்தோஷ் கதாநாயகியாக நடித்த 'ஓஜோ கண்மணி' வெப்சீரிஸ் இன்னமும் யூடியூப் (Youtube)-இல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் ரெபேக்கா சந்தோஷ் புதியதாக மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு காரை டெலிவிரி பெறும் காட்சிகளையும், பின்னர் காரை ஹைவே ஒன்றில் வேகமாக ஓட்டிச் செல்லும் காட்சிகளையும் வீடியோவாக தொகுத்து தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ரெபேக்கா சந்தோஷ் வெளியிட்டுள்ளார்.
சிவப்பு நிறத்திலான மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை இந்த டிவி சீரியல் நடிகை வாங்கியுள்ளார். இந்த சிவப்பு நிறத்தை 'டாங்கோ சிவப்பு' (Tango Red) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரஸ்ட், டெசர்ட் மிஸ்ட் சாடின், டெசர்ட் மிஸ்ட், ஃபையர்ஸ்டோர்ம் ஆரஞ்ச் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை கலர் உள்ளிட்ட ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் 2, பேக்-3 செலெக்ட், பேக்-3 என 5 விதமான வேரியண்ட்களில் பிஇ 6 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் உள்ளன. இதில், ரூ.26.90 லட்சம் விலை கொண்ட பேக்-3 வேரியண்ட்டின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன.
ஆதலால், மலையாள டிவி சீரியல் நடிகை ரெபேக்கா சந்தோஷும் பேக்-3 வேரியண்ட்டை தான் டெலிவிரி பெற்று இருப்பார். இதனை தொடர்ந்து பேக்-3 செலெக்ட் வேரியண்ட்டின் டெலிவிரிகள் ஜூன் மாதத்தில் இருந்தும், மற்ற வேரியண்ட்களின் டெலிவிரிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பும் துவங்கப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து டெலிவிரி பெற்று வருகின்றனர். இந்த வரிசையில், டிவி சீரியல் நடிகை ரெபேக்கா சந்தோஷும் டெலிவிரி பெற்றுள்ளார். டாங்கோ சிவப்பு நிறத்தில் இந்த காரை அவர் வாங்கியிருப்பது சிறப்புமிக்கதாக விளங்குகிறது. ஏனெனில், பிஇ 6 எலக்ட்ரிக் காரை விளம்பரம் செய்யும்போது இந்த நிறத்தை தான் மஹிந்திரா நிறுவனம் ஹைலைட் படுத்தி காட்டியது.


Click it and Unblock the Notifications









