உசுர காப்பாத்திக்க எல்லா தெய்வங்களையும் கும்பிடுறதுக்கு பதிலா இந்த கார வாங்கி போடுங்க..
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார் மாடல்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி (Mahindra Thar Roxx SUV)-ம் ஒன்றாகும். இது 3 கதவுகள் கொண்ட தார் கார் மாடலின் 5 டோர் வெர்ஷன் ஆகும். இந்த கார் மாடல் விற்பனைக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. டெலிவரி பணிகள்கூட தொடங்கி கணிசமான வாரங்களே ஆகின்றன. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியே இந்த பணிகள் தொடங்கின.
இந்த மாதிரியான சூழலிலேயே தார் ராக்ஸ் கார் மாடல் மிக மோசமான விபத்தைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, தார் ராக்ஸ் விபத்தைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்த விபத்தின் வாயிலாக இந்த கார் மிகவும் உறுதியானது என்கிற தகவலும் தெரிய வந்திருக்கின்றது.

இன்றே (நவம்பர் 14) மஹிந்திரா தார் ராக்ஸ் அதிக பாதுகாப்பான கார் மாடல் என்கிற தகவல் வெளியாகின. அண்மையில் இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்திய பாரத் என்சிஏபி (Bharat NCAP) இன்றைய தினமே அதன் முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவுகளின் வாயிலாக புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவருக்கும் உகந்த வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மிக முக்கியமாக பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை குவித்து அசத்தி இருக்கின்றது. இந்த தகவல் வெளியாகுவதற்கு முன்னரே தான் ஓர் அதிக பாதுகாப்பு திறன் வாய்ந்த வாகனம் என்பதை நிஜ வாழ்க்கை விபத்தின் வாயிலாக இந்த கார் மாடல் உறுதி செய்துவிட்டது.
அதேவேளையில், டெலிவரி எடுத்து கொஞ்சம் நாட்களே ஆகின்ற நிலையில், குறிப்பாக, புதிய நிலை மாறாத முன்பே விபத்தில் சிக்கி இந்த கார் மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விபத்தினால் முகப்பு பகுதியை முற்றிலுமாக இந்த கார் மாடல் இழந்திருக்கின்றது. இருப்பினும் பயணிகளுக்கு எந்தவொரு ஆபத்தான சூழலும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
அடையாளம் காண முடியாத அளவிற்கு அக்காருக்கு சேதம் ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால், விபத்து எப்படி அரங்கேறியது?, எந்த வாகனத்துடன் அது மோதியது? என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், குஜராத்திலேயே இந்த விபத்து அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், விபத்தினால் மிக மோசமான பாதிப்புகளுக்கு அது ஆளாகி இருப்பதும் தெரிகின்றது.
மேலும், காரில் ஏற்பட்டு இருக்கும் சேதங்களை வைத்து பார்க்கையில் இந்த வாகனம் டிவைடர் அல்லது பெரிய எலெக்ட்ரிக் கம்பத்தில் மோதியிருக்கக் கூடும் என யூகிக்க முடிகின்றது. இதற்கேற்ப காரின் முன் பக்கத்தின் மையப் பகுதி மட்டும் உருக்குலைந்து போயிருக்கின்றது. பாதுகாப்பை அள்ளி தரும் வாகனமாக தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த காருக்கு இந்தியாவில் ரூ. 12.99 என்கிற விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிபட்ச விலை ரூ. 22.49 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், லெவல் 2 வகை அடாஸ் அம்சம் எல்லாம் தார் ராக்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைண்டர், சீட் பெல்ட்டை தானாக இருக்கும் திறன் மற்றும் லோடை லிமிட் செய்யும் திறன் ஆகியவற்றையும் தார் ராக்ஸ் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, டிராக்சன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், தானாக டிம் ஆகும் வசதிக் கொண்ட ஐஆர்விஎம் ஆகிய அம்சங்களையும் இது தாங்கியிருக்கும்
மேலும், டிஸ்க் பிரேக், பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர் உள்ளிட்ட அம்சங்களையும் மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி தாங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் ராக்ஸ் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புக்கிங் தொடங்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே 1.76 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அது குவித்தது. இது பாதுகாப்பான கார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருப்பதால் மேலும் இதற்கான டிமாண்ட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








