வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உலக புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை (Atal Tunnel) அமைந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைத்தார். இந்த சூழலில், கடந்த ஜனவரி 1ம் தேதி (புத்தாண்டு) அடல் சுரங்கப்பாதையில் நிறைய வாகனங்கள் சென்றுள்ளன. இதன் மூலம் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

2022ம் ஆண்டின் முதல் நாளில், அதாவது 24 மணி நேரத்தில், அடல் சுரங்கப்பாதையை ஒட்டுமொத்தமாக 7,515 வாகனங்கள் கடந்துள்ளன. இதற்கு முன்பாக அடல் சுரங்கப்பாதையை ஒரே நாளில் இவ்வளவு அதிக வாகனங்கள் கடந்து சென்றது கிடையாது. முதல் முறையாக ஒரே நாளில் இவ்வளவு அதிகமான வாகனங்கள் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தியுள்ளன.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

அடல் சுரங்கப்பாதையை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போதில் இருந்து ஒரே நாளில் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். கடந்த ஜனவரி 1ம் தேதியன்று இந்த 7,515 வாகனங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

தற்போது அடல் சுரங்கப்பாதை இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அடல் சுரங்கப்பாதை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாது, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட பின்னர் அங்கு ஒரு சில விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடல் சுரங்கப்பாதைக்கு சுற்றுலா பயணிகள் பலர் படையெடுத்து வருகின்றனர். அவர்கள் சுரங்கப்பாதையின் உள்ளே நடுவழியில் வாகனங்களை நிறுத்துவது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

ஆனால் சுரங்கப்பாதைகளுக்குள் இதுபோன்று நடந்து கொள்வது தவறு. இதுபோன்ற விதிமுறை மீறல்கள் காரணமாகவே அடல் சுரங்கப்பாதையில் விபத்துக்கள் நிகழ்ந்தது. இதன்பின் அதிகாரிகள் அங்கு விதிமுறைகளை கடுமையாக்கினர். அங்கு சுற்றுலா பயணிகள் தற்போது தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர்.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

எனவே அடல் சுரங்கப்பாதைக்கு நீங்கள் சென்றால், போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது இதுபோன்ற சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியிலும் சாலைகள் நமக்கு பலன் அளிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் பணிகளில் ஒன்றிய அரசு தற்போது தீவிரமாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு இணையான சாலைகளை இந்தியாவில் பார்க்கலாம் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

இதுதவிர எல்லை பகுதிகளிலும் ஒன்றிய அரசு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இவை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இருப்பதுதான் இதற்கு காரணம். இந்தியாவில் எல்லை பகுதியில் சீனா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் எந்நேரமும் அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் உள்ளது.

வாவ்... பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?

ஒருவேளை போர் ஏற்படும் சூழல் உருவானால், ராணுவ வீரர்கள் விரைவாக எல்லைக்கு செல்வதற்கு இந்த சாலைகள் உதவி செய்யும். அத்துடன் ராணுவ உபகரணங்களையும் விரைவாக எல்லை பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாகவே எல்லை பகுதிகளிலும் ஒன்றிய அரசு சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்தியா முழுவதும் தரமான சாலைகளை நாம் எதிர்பார்க்கலாம். சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் திட்டத்திற்கும் இவை உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Record number of vehicles cross atal tunnel check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X