எழுதி வெச்சுக்கோங்க... இந்த சின்ன பொண்ணு பெரிய நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது... 22 வயசுல இந்த காரா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை எஸ்யூவி (Entry-level SUV) ரக கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை X1 sDrive18i M Sport மற்றும் X1 sDrive18d M Sport ஆகியவை ஆகும். இதில், X1 sDrive18i M Sport வேரியண்ட்டில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 136 பிஎஸ் மற்றும் 230 என்எம் ஆகும். இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Reem Shaikh Buys BMW X1

இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 50.80 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் X1 sDrive18d M Sport வேரியண்ட்டில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 150 பிஎஸ் மற்றும் 360 என்எம் ஆகும். இந்த இன்ஜின் உடனும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 54.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 65 லட்ச ரூபாய் மற்றும் 70 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை இளம் நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ரீம் ஷேக் (Reem Shaikh) ஆவார்.

Reem Shaikh

22 வயது மட்டுமே நிரம்பிய இவர், ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை 60 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை வாங்கியிருப்பது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவை சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அத்துடன் மிக இளம் வயதிலேயே பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை வாங்கிய ரீம் ஷேக்கிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இது சொகுசு கார் என்பதுடன், செயல்திறன் மிக்கதாகவும் உள்ளது.

இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டி விடும். ஆனால் டீசல் வேரியண்ட்டை இதை வெறும் 8.9 வினாடிகளிலேயே செய்து விடும். இந்த காரில் சொகுசு வசதிகளுக்கும் பஞ்சம் கிடையாது.

மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு எஸ்யூவி ரக காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ், பிரேக் அஸிஸ்ட் உடன் ஏபிஎஸ், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes Benz GLA) மற்றும் ஆடி க்யூ3 (Audi Q3) போன்ற கார்களுக்கு எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வெறும் 22 வயதில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 போன்ற ஒரு சொகுசு காரை வாங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம்தான். இது இளம் நடிகையான ரீம் ஷேக்கின் திறமை மற்றும் உழைப்பை காட்டுகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2025, 18:37 [IST]
English summary
Reem shaikh buys bmw x1 suv check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+