அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

காவல் துறையினர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

அனைத்து வாகனங்களின் பின் பகுதியிலும் பிரதிபலிப்பு டேப் (Reflective Tape) கட்டாயமாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய வர்த்தக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் சரியாக தெரியாமல் சாலை விபத்துக்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் நோக்கில், அனைத்து வாகனங்களுக்கும் பிரதிபலிப்பு டேப் கட்டாயம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

இதை தொடர்ந்து தற்போது இந்த உத்தரவை காவல் துறையினர் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே அனைத்து வாகனங்களிலும் பிரதிபலிப்பு டேப்களை ஒட்டி கொள்ளும்படி பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை மீறி பிரதிபலிப்பு டேப் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் பிரதிபலிப்பான்கள் உடன்தான் வருகின்றன. பின் பகுதியில் டெயில்லேம்ப்களுக்கு கீழாக அவை வழங்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் நான்கு சக்கர வாகனங்களில் பின் பக்க பம்பரின் மீது பிரதிபலிப்பான்களை காணலாம். பொதுவாக மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களில் ஒரே ஒரு பிரதிபலிப்பான் மட்டுமே இருக்கும்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

ஆனால் நான்கு சக்கர வாகனங்களில் வழக்கமாக இரண்டு இருக்கும். ரேடியம் போன்ற ஒளிரும் தன்மையுள்ள பொருட்கள் மூலம் இந்த சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் உருவாக்கப்படுகின்றன. உலகிலேயே சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

பனி மூட்டம் மற்றும் குறைவான வெளிச்சம் காரணமாக வாகனங்கள் பார்வைக்கு சரியாக புலப்படாமல் போவதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக குளிர்காலங்களில் வட இந்திய பகுதிகளில் அதிகப்படியான சாலை விபத்துக்களுக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

ஆனால் பிரதிபலிப்பான்கள் மூலம் 'விஸிபிலிட்டி' அதிகரிக்கும். இரவு நேரங்கள் மற்றும் வெளிச்சம் குறைவான சமயங்களில் பிரதிபலிப்பான்கள் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாகவே அனைத்து வாகனங்களிலும் பிரதிபலிப்பான்கள் இருப்பது கட்டாயம் என காவல் துறையினர் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

வாகனங்கள் மட்டுமல்லாது, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், டிவைடர்கள் மற்றும் தூண்கள் ஆகியவற்றிலும் பிரதிபலிப்பான் டேப்களை ஒட்டும் பணிகளை நொய்டா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

நொய்டா காவல் துறைதான் இந்த அதிரடி உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''பிரதிபலிப்பு பட்டைகள் மூலம் 'விஸிபிலிட்டி' அதிகரிக்கும். இதன் மூலம் சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். டிராக்டர்கள், லாரிகள் மற்றும் இதர வாகனங்களிலும் பிரதிபலிப்பு பட்டைகளை ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

காவல் துறையின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்கள் வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களது பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவது, காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது, அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது போன்ற போக்குவரத்து விதிமுறைகளையும் அனைவரும் பின்பற்றினால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Thursday, January 27, 2022, 20:12 [IST]
English summary
Reflective tapes must for all vehicles check details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+