ஜிஎஸ்டியை குறைக்குறேன்னு சொல்லி இதை ஏத்திட்டீங்களே! டபுள் மடங்கு கட்டணம் அதிகமாகிடுச்சு!

இந்தியாவில் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை இரு மடங்களாக உயர்த்தியுள்ளது. அதே நேரம் 15-20 ஆண்டுகள் பழமையான வாகனப்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாகன பதிவெண்ணைபுதுப்பிக்க வேண்டும். இீப்படியாக வாகன பதிவெண் புதிப்பிற்காக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து துறை இந்த கட்டணங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது.

registration renewal fee Double

அதன்படி 20 ஆண்டுகள் பழமையான வாகனத்தை புதுப்பிக்க கட்டணம் இரு மடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎஸ் 2 மாசு கட்டுப்பாட்டின்படி உருவாக்கபட்ட வானகங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கும் நடவடிக்கையாக இது செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்க 15-20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ1000 கட்டணமாகவும், 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ2000 கட்டணமும் விதிக்கப்படுகிறது. 3 வீலர்களுக்கு 15-20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு ரூ2500 மற்றும் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ5000 கட்டணம் வசூலிக்கப்படகிறது.

registration renewal fee Double

கார்/ ஜீப்களுக்கு 15-20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ5,000 கட்டணமும், 20 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு ரூ10,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகளுக்கு 15-20 ஆண்டுகள் பழமையான வாகனமாக இருந்தால் ரூ10,000 கட்டணமும் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ20,000 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட கார்/ ஜீப் களுக்கு 15-20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ40,000 கட்டணமும், 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு ரூ80,000 கட்டணமும், வசூலிக்கப்படுகிறது. மற்ற வாகனங்களுக்கு 15-20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு ரூ6000 கட்டணமும், 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு ரூ12,0000 என கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் இருக்கிறதோ அதே கட்டணம் தான் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கும் இருந்தது. தற்போது இந்த கட்டணம் இரு மடங்காக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் காற்று மாசு மட்டுமல்லாமல் சாலைகளில் செல்லும் போது அதிக சேதாரத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் இந்த வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சுற்று சுழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும். அதே நேரம் தேவையில்லாமல் அதன் உதிரிபாகங்கள், ஆயில்கள், குறைவான மைலேஜ் குடுத்தால் பெட்ரோல் செலவு எல்லாம் நாட்டிற்கு தேவையில்லாத பாரமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தவே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

புதிய வாகனங்கள் வாங்கும்போது அதற்கு 15 ஆண்டுகால அவகாசத்துடன் தான் ஃபிட்னஸ் சான்று வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு அரசு சொன்னபடி வாகனம் ஃபிட்னஸ் உடன் இருந்தால் அதற்கு மீண்டும் பதிவெண் புதுப்பிப்பு செய்ய முடியும். இதற்கு அரசுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய வாகனங்களை பொருத்தவரை காற்றுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் இந்த வாகனங்களைபயன்பாட்டிலிருந்து நீக்கும் நடவடிக்கையாக இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நிச்சயம் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 11:21 [IST]
English summary
Registration renewal fee double vehicles older than 20 years
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+