டயர்கள் ஒவ்வொன்னும் மாடு மாதிரி உழைக்கும்!! ரெயிஸ் மோட்டோ டயர் நிறுவனம் ஏற்பாடு செய்த ரைடிங் நிகழ்ச்சி!
ரெயிஸ் மோட்டோ (Reise Moto), இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ரெயிஸ் மோட்டோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தங்களது டயர்களை ஓட்டிப் பார்த்து சோதனை செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இதற்காக, பெங்களூரில் கனக்புரா ஆஃப்-ரோடு ரேஸ் டிராக் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ரெயிஸ் மோட்டோ மற்றும் மோட்டோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ரேஸ் டிராக் ரைடிங்கிற்கு ஏற்பாடு செய்து இருந்தன. இந்த இலவச ரைடிங்கில், ரெயிஸ் மோட்டோ டயர்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பைக்குகளுடன் கலந்துக் கொண்டனர். இந்த ரைடிங் நிகழ்ச்சிக்கு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் சென்றது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
ஆஃப்-ரோடு ரேஸ் டிராக் என்பதால், இந்த ரைடிங்கில் பாதைகள் யாவும் பள்ளம், மேடுகளாக இருந்தன. ஆதலால், ரெயிஸ் மோட்டோ டயர்களை பரிசோதிக்கும் ரைடிங்காக இது இருந்தாலும், இந்த ஆஃப்-ரோட்டில் பைக்கை ஓட்டுவதற்கு தனி திறன் கட்டாயம் வேண்டும். ஆஃப்-ரோட்டில் அதிகமாக பைக் ஓட்டிய அனுபவம் இல்லாதவர்களுக்காக பயிற்சியாளர்களையும் ரெயிஸ் மோட்டோ நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்திய பயிற்சியாளர்கள் மட்டுமின்றி, ஆஃப்-ரோட்டில் பைக் ஓட்டிய அனுபவமிக்க வெளிநாட்டு பயிற்சியாளர்களும் தங்களது ஆலோசனைகளை ரைடர்களுக்கு வழங்கினர். மண் பாதைகள் மட்டுமில்லாமல், கரடு முரடான கற்களால் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட டிராக்குகளிலும் விரும்பிய ரைடர்கள் தங்களது பைக்குகளை ஏற்றி, இறக்கி பார்த்தனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ரைடிங் நிகழ்ச்சி செம்ம ஜாலியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








