இந்த முறை இந்தியன் சூப்பர்கிராஸ் பந்தயம் பயங்கர விறுவிறுப்பா இருக்கும்!! ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட்ஸ் 6வது அணியாக..
சியட் இந்தியன் சூப்பர்கிராஸ் ரேசிங் லீக்கில் (CEAT ISRL) ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட்ஸ் 6வது அணியாக இணைந்துள்ளது. இதன் மூலமாக, இந்தியன் சூப்பர்கிராஸில் புதிய பரிணாமத்தை நிர்ணயிக்கும் முனைப்பில் ரெய்ஸ் சூப்பர்ஸ்போர்ட்ஸ் குழு உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மும்பையை சேர்ந்த டயர் உற்பத்தி நிறுவனம் ரெய்ஸ் மோட்டோ ஆகும். மஹான்சாரியா குழுமத்தின் ஓர் அங்கமாக விளங்கும் ரெய்ஸ் மோட்டோ கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து செயல்பட துவங்கியது. இந்திய நிலப்பரப்புக்கு ஏற்ற டயர்களை உற்பத்தி செய்ய, கட்டிங்-எட்ஜ் ஐரோப்பிய டெக்னாலஜியை அறிமுகம் செய்து அதனை ரெய்ஸ் மோட்டோ உபயோகப்படுத்தி வருகிறது.

ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் அதி-செயல்திறன்மிக்க டயர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மிடாஸ் என்ற உலகளாவிய டயர் சப்ளை நிறுவனத்துடன் கூட்டணியில் இருக்கும் ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் அடுத்ததாக, மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கான ரைடிங் உடைகள், ஆக்ஸஸரீகள் மற்றும் உபகரணங்களையும் முன்னணி ஐரோப்பிய பிராண்ட்களில் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
பாதுகாப்பான பயணத்திற்காக, இந்திய பைக் ரைடர்களுக்கு ஐரோப்பிய தரத்திலான பொருட்களை வழங்க வேண்டும் என்பதும், இதன் மூலமாக ரைடர்களுக்கு ஸ்டைல், பாதுகாப்பு மற்றும் செயல்படுதிறன் இவை மூன்றும் சரியான கலவையில் கிடைக்க வேண்டும் என்பதும் தான் ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

இந்த நிலையில், சியட் நிறுவனம் நடத்தும் இந்தியன் சூப்பர்கிராஸ் ரேசிங் லீக்கிற்காக 'ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட்ஸ்' என்ற சூப்பர்கிராஸ் ரேசிங் குழுவை ரெய்ஸ் மோட்டோ உருவாக்கி உள்ளது. சியட் இந்தியன் சூப்பர்கிராஸ் ரேசிங் லீக்கில் இணைந்துள்ள 6வது அணியாக ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட்ஸ் விளங்குகிறது. இந்த சூப்பர்கிராஸ் பந்தய தொடர் வருகிற 2024 ஜனவரி மாதத்தில் துவங்குகிறது.
புதிய ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட் குழுவை துவங்கி இருப்பது குறித்து ரெய்ஸ் மோட்டோ & மஹான்சாரியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் மஹான்சாரியா கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே, ரெய்ஸ் நிறுவனம் மோட்டோஸ்போர்ட்ஸின் தீவிர பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 20 பந்தயங்களில் 50க்கும் அதிகமான பந்தய வீரர்களுடன் கலந்துக் கொண்டு 125க்கும் அதிகமான போடியம் முடித்துள்ளோம்.

சொந்த பந்தயக் குழுவை தொடங்குவதற்கான முடிவு எங்களது அடுத்த லாஜிக்கல் செயல் ஆகும். மேலும், ரைடர்ஸ் மற்றும் பைக் ஆர்வலர்களின் துடிப்பான சமூகத்துடன் ஆழமான தொடர்பை வளர்ப்பதற்கான எங்கள் பார்வையுடன் ஒத்துப் போகிறது" என்றார். சூப்பர்கிராஸ் இந்தியாவின் துணை நிறுவனர் வீர் படேல் கூறுகையில், "ரெய்ஸ் மோட்டோஸ்போர்ட்ஸ் இணைந்திருப்பது எங்கள் லீக்கிற்கு மற்றொரு உற்சாகத்தையும் நிபுணத்துவத்தையும் தருகிறது.
ரெய்ஸ் மோட்டோவின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வமும், அர்ப்பணிப்பும் இந்திய சூப்பர் கிராஸ் பந்தயத்தின் தரத்தை உயர்த்துவதற்கான எங்கள் நோக்கத்துடன் கணக்கச்சிதமாக ஒத்துப் போகிறது. லீக் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு இந்தியன் சூப்பர்கிராஸ் இணையத்தள பக்கத்தை காணவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூப்பர்கிராஸ் பந்தயங்கள் நமக்கு புதியது என்றாலும், இந்தியாவிலும் இவ்வாறான பந்தயங்கள் நன்கு பிரபலமாகி வருகின்றன. அதனை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியட் 2024ஆம் ஆண்டிற்கான இந்தியன் சூப்பர்கிராஸ் ரேசிங் பந்தயத்தை நடத்துகிறது. ரெய்ஸ் மோட்டோ போன்ற வலிமையான அணிகள் பங்கேற்பதால், இந்தியன் சூப்பர்கிராஸ் பந்தயத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Click it and Unblock the Notifications









