அதிர்ச்சியில் உறைந்த தமிழ்நாடு! தொழிலாளி மீது மோதி விட்டு நிக்காம போனது அவரோட காரா! பொறி வெச்சு பிடிச்ச போலீஸ்

உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents), ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற மறுப்பதும், மோசமான நிலைமையில் இருக்க கூடிய சாலைகளும்தான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில், சில சமயங்களில் பிரபலங்களின் பெயர்கள் கூட பெரும் சர்ச்சையில் சிக்கி விடுகின்றன. இதன்படி தற்போது ஒரு பிரபலத்தின் பெயர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அவர் சீரியல் நடிகையான ரேகா நாயர் (Rekha Nair) ஆவார்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சாலை விபத்து, சென்னையில் (Chennai) நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடைபெற்றுள்ளது. சென்னை ஜாஃபர்கான்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த சாலை விபத்தில், மஞ்சன் என்பவர் உயிரிழந்துள்ளார். 55 வயதாகும் இவர் கூலி தொழிலாளி ஆவார்.

Mahindra Thar-Rekha Nair

நேற்று இரவு ஜாஃபர்கான்பேட்டை வழியாக வந்த கார் ஒன்று, மஞ்சன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கிருந்த மக்கள் மஞ்சனை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதன்பின் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதன் மூலமாக, சாலை விபத்தை ஏற்படுத்திய காரின் பதிவு எண் தெரியவந்தது. தொடர் விசாரணை மேற்கொண்டதில், அது சீரியல் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் என்பதை காவல் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, சீரியல் நடிகை ரேகா நாயரின் கார் டிரைவரான பாண்டி என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதாகும் இவர்தான், சம்பவத்தின்போது காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பவம் நிகழ்ந்த சமயத்தில், சீரியல் நடிகை ரேகா நாயர் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சாலை விபத்திற்கு என்ன காரணம்? டிரைவர் பாண்டி குடிபோதையில் இருந்தாரா? என்பது போன்ற தகவல்கள் எல்லாம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சாலை விபத்து உணர்த்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சாலை விபத்திற்கான உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை. யார் மீது தவறு? என்பதும் தெரியவரவில்லை. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால், மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த சாலை விபத்து அனைவருக்கும் உணர்த்துகிறது.

சாலை விபத்தில் சிக்கியது, இந்திய சாலைகளில் மிகவும் பிரபலமாக உள்ள மஹிந்திரா தார் (Mahindra Thar) என தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, ஆஃப்ரோடு சாகச பயணங்களுக்கும் கூட பயன்படுத்த முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 12:13 [IST]
English summary
Rekha nair car accident all you need to know
மேலும்... #india #road accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+