இந்திய சினிமாவையே தன் கண்ட்ரோலில் வெச்சிருந்த தமிழ் நடிகையா இது! 70 வயசுல ஊரையே மிரள விட்ற கார்ல போறாங்க!

மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலர் தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகள் பலர், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் மிகவும் வெற்றிகரமான நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

இதற்கு ஸ்ரீதேவி (Sridevi) ஒரு நல்ல உதாரணம். தமிழ்நாட்டில் பிறந்தவரான ஸ்ரீதேவி, தமிழ் மட்டுமின்றி, கன்னடா, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இதேபோல் ஹேமமாலினியும் (Hema Malini) தமிழ்நாட்டில் பிறந்து, இந்தியா முழுக்க வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

Rekha Spotted In Range Rover

இவரும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தார். தமிழ்நாட்டில் பிறந்து இந்தியா முழுக்க பிரபலமாக திகழ்ந்த நடிகைகளின் பட்டியலை தயாரித்தால், அதில் ரேகாவிற்கும் (Rekha) நிச்சயம் இடம் உண்டு. அவரை தவிர்த்து விட்டு இந்த பட்டியலை தயாரிக்க முடியாது.

பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் (Gemini Ganesan) மகளான ரேகாவிற்கு தற்போது 70 வயதாகிற. இவர் தமிழ்நாட்டில் பிறந்து, பாலிவுட்டில் மிகவும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர். இவரது நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு உம்ரோ ஜான் (Umrao Jaan) என்ற திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Rekha

இது இந்திய சினிமா துறையின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் கருதப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை, ரேகா வென்றார். அத்துடன் இன்னும் பல்வேறு விருதுகளையும் இந்த படம் வென்று குவித்தது. இந்த திரைப்படம் வெளியாகி 44 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ரீ-ரிலீஸ் (Re-release) செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, ரேகா காரில் ஏறி புறப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஆகும். முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட இந்த கார், எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 2.40 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 4.55 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.

ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். தற்போதைய இளம் தலைமுறை நடிகைகளை போலவே, ரேகாவும் மிகவும் ஆடம்பரமான சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் ஆவார். அவரிடம் உள்ள கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி.

சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புமிக்க ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolce Royce Ghost), சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் (BMW i7 Electric), சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆடி ஏ8 (Audi A8) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி (Mercedes Benz GLC 43 AMG) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் ரேகாவிடம் உள்ளன.

இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் உடன், வெறும் 13 லட்ச ரூபாய் மதிப்பு மிக்க ஹோண்டா சிட்டி (Honda City) கார் ஒன்றையும் ரேகா வைத்துள்ளார். ஹோண்டா சிட்டி விலை குறைவானது என்றாலும் கூட, இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உம்ரோ ஜான் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்து செல்ல ரேகா பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் கார், இந்திய பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு காராக உள்ளது. சல்மான் கான் (Salman Khan) மற்றும் ஷாருக்கான் (Shahrukh Khan) உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பலரும், ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, June 27, 2025, 14:45 [IST]
English summary
Rekha spotted in range rover in umrao jaan re release event viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+