இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

இலவச எரிபொருளை வழங்குவதற்காக நடமாடும் வாகனம் ஒன்றை ரிலையன்ஸ் மொபிலிட்டி பிபி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

தளர்வுகளற்ற மற்றும் தீவிர ஊரடங்கு விதிகளின் காரணமாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் லேசாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், ஆம்புலன்ஸ்களின் அலறல்கள் ஓயாத நிலையே தற்போது நாட்டில் தென்படுகின்றது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

அவை 24 மணி நேரமும் சாலையில் இயங்கிய வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில், கோவிட்-19 சிகிச்சையில் முழு அர்பணிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு இலவசமாக எரிபொருளை வழங்குவதற்காக ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நிறுவனம் ஓர் வாகனத்தை தயார் செய்துள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

அந்த வாகனங்களுக்கு 'மொபைல் ப்யூவர் பவுசர்' எனும் பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் பெரிதும் அவதிக்குள்ளாகி வரும் மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவின் மும்பை நகரத்திலேயே இந்த வாகனத்தை அறிமுகம் செய்திருப்பதாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றின் வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

கொரோனா வைரஸ் களப் பணியில் ஈடுபட்டு வரும் ஆம்புலன்ஸ்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ரிலையன்ஸ் செய்து வருவதாக கூறப்படுகின்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை வாயிலாக செய்யப்பட்டு வரும் இந்த இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 811.07 கிலோலிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

இந்த எரிபொருளின் மதிப்பு ரூ. 7.30 கோடியாகும். நாடு முழுவதிலும் 21,080 ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தை வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்திருப்பதாக ரிலையன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தேவைப்பட்டால் அடுத்த சில நாட்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

மேலும், நாள் ஒன்றிற்கு 50 முதல் 60 கிலோ லிட்டர் எரிபொருளை இலவசமாக அது திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்கள் நகரத்திற்கு வெளிப்புறத்திலேயே இருக்கின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே நகரத்திற்குள் வலம் வரும் வகையில் 'மொபைல் ப்யூவல் பவுசர்' வாகனத்தை நிறுவனம் தயார்ப்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

அந்த வாகனம் மும்பையின் எம்சிஜிஎம் ஒர்லி போக்குவரத்து டெப்போ பகுதியில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. இங்கிருந்தே தேவையான ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் இடம் தேடி சென்று எரிபொருளை அந்த வாகனம் வழங்கும். இது தவிர தற்போது நாடு முழுவதும் 1,421 பெட்ரோல் நிலையங்களை நிறுவனம் இயக்கி வருகின்றது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

இவற்றின் வாயிலாகவும் கணிசமான லிட்டர் எரிபொருள்களை அவசர கால வாகனங்களான ஆம்புலன்ஸ்களுக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆம்புலன்ஸ்கள் மட்டுமின்றி அரசு மற்றும் மருத்துவம் பிரிவுகளைச் சார்ந்த வாகனங்களுக்கும் இலவசமாக எரிபொருளை வழங்கி வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

தொடர்ந்து, அரசின் அங்கீகாரத்துடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கும் இலவச எரிபொருளை வழங்கி வருகின்றது, ரிலையன்ஸ். நிறுவனத்தின் இந்த இலவச எரிபொருள் சேவையைப் பெறுவதற்கு அரசின் குறிப்பிட்ட சான்றிதழ் தேவை என கூறப்படுகின்றது. அந்த ஒப்புதல் சான்று பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே இலவச எரிபொருளை ரிலையன்ஸ் வழங்கி வருகின்றது.

இப்படி ஒரு சேவையை ரிலையன்ஸ் இந்தியால செஞ்சிட்டு இருக்கா..! இலவச எரிபொருளை வழங்க நடமாடும் வாகனம் அறிமுகம்...

ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டின் 21 முக்கிய மாநிலங்களில் அதன் எரிபொருள் நிலையங்களை அமைத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றது. மிக விரைவில் எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கையை 5,500ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த இலக்கை நிறைவு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Reliance BP Mobility Launches Mobile Fuel Bowser To Provide Free Fuel To Emergency Service Vehicles. Read In Tamil.
Story first published: Wednesday, June 2, 2021, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X