விஷால் கூட நடிச்சவரா இவரு... அவரு வாங்கியிருக்கும் காரை பார்த்தா விஷாலே மிரண்டு போயிருவாரு!

மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் பாபுராஜ்-ம் ஒருவர் ஆவார். இவரே மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஜீப் விராங்ளர் (Jeep Wrangler) எனும் சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக சொகுசு கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிடன் விலை மட்டுமே ரூ. 67.65 லட்சத்திற்கும் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதே கார் மாடலில் ரூபிகான் எனும் தேர்வையும் ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அதன் விலை ரூ. 71.65 லட்சத்திற்கும் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக மிக விலை உயர்ந்த கார் மாடலையே மலையாள நடிகர் பாபுராஜ் தற்போது வாங்கி இருக்கின்றார்.

Baburaj buys jeep wrangler

1994 ஆம் ஆண்டிலிருந்தே இவர் திரைத் துறையில் பணியாற்றி வருகின்றார். இவர் நடிகர் மட்டுமல்ல சில திரைப்படங்களையும் அவர் தயாரித்து இருக்கின்றார். அந்தவகையில், நான்கு மலையாள திரைப்படங்களையும், ஒரு தமிழ் படத்தையும் அவர் தயாரித்திருக்கின்றார். மேலும், சென்ற 2022 ஆம் ஆண்டில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகிய 'வீரமே வாகை சூடும்' படத்திலும் அவர் நடித்திருக்கின்றார்.

இந்த படத்தில் 'நெடுஞ்செழியன்' எனும் கதாபாத்திரத்திலேயே அவர் தோன்றியிருப்பார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் நடிகரே தற்போது ஜீப் விராங்ளர் எனும் அட்டகாசமான சொகுசு எஸ்யூவி ரக காரை வாங்கி இருக்கின்றார். இந்த எஸ்யூவி சொகுசு காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Baburaj buys car

பாலிவுட் திரையுலகில்கூட இந்த காரை பலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் போன்ற முன்னணி நடிகர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சொகுசு வசதிகள் மிக ஏராளம். மேலும், எந்தமாதிரியான சாலையாக இருந்தாலும் இந்த கார் அசால்ட் செய்துவிடும்.

இதனால்தான் திரைத்துறையினர் மத்தியிலும் பணக்காரர்கள் மத்தியிலும் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இது சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி கார் மட்டுமல்ல அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடிய ஓர் எஸ்யூவி காரும் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் 270 பிஎச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனுடன் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட விராங்ளர் காரையே பாபுராஜ் தற்போது வாங்கியிருக்கின்றார்.

இந்த வாகனத்தை கொச்சியில் உள்ள ஜீப் டீலர் ஒருவரிடமிருந்தே அவர் வாங்கி இருக்கின்றார். பிரகாசமான வெள்ளை நிறம் கொண்ட தேர்வையே அவர் வாங்கி இருக்கின்றார். கவர்ச்சியான தோற்றம், அதிக சொகுசு வசதிகள் மற்றும் எந்த மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் இவற்றிற்காகவே இந்த காரை பலரும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, அதிக கவர்ச்சியான தோற்றம் காரணமாக திரைத்துறையினர் இந்த கார் வெகுவாக கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. பாபுராஜின் கார் சேகரிப்பில் புதிய ஜீப் விராங்ளர் ஒரு சிறந்த தேர்வாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக இந்த கார் சாலையில் செல்லும்போது கட்டாயம் கார் காதலர்களின் கவனத்தை திசை திருப்பும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை உயரிய சொகுசு கார் மாடல்களில் ஜீப் விராங்ளரும் ஒன்றாகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாபுராஜ் தற்போது அந்த காரை வாங்கி இருக்கின்றார். இவரை இன்னும் பலரின் கவனத்தை இந்த கார் ஈர்க்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 15:00 [IST]
English summary
Renowned actor baburaj purchased brand new jeep wrangler suv in kochi
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+