கார், பைக் லோன் இஎம்ஐ குறையப்போகுது! எவ்வளவு குறையும் தெரியுமா?

ரிசர்வ் வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும். இதனால் தற்போது வாகனங்களுக்கு இஎம்ஐ செலுத்தி வருபவர்கள் எவ்வளவு பணம் குறைவாக செலுத்த வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாகனங்களுக்காக கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தை பெற்று தான் கடன் வழங்கி வருகின்றனர். இப்படியாக ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்திற்கு வட்டியும் வசூலித்து வருகிறது. இப்படியாக குறிப்பிட்ட நிறுவனங்கள் வழங்கும் கடனிற்கு ரெப்போ வட்டி போக கூடுதலாக அந்நிறுவனத்தின் லாபத்தையும் சேர்த்து வட்டியாக வசூலித்து வருகின்றனர்.

Repo Rate

இந்நிலையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிப்பதாலும் 7.3 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி இருப்பதாலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித்தை 0.25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.தற்போது 5.25 சதவீம் தான் ரெப்போ வட்டி விதிக்கப்படுகிறது. இந்த குறைக்கப்பட்ட வட்டி வகிதம் நேரடியாக பயணிகளுக்கு சென்று சேர வேண்டும். அதாவது தற்போது நீங்கள் கடன் வாங்கியிருந்தால் தற்போது அதற்கான இஎம்ஐ குறைய வாய்ப்புள்ளது.

இதன்படி தற்போது நீங்கள் கடனுக்கு செலுத்தும் வட்டிவிகிதத்தில் 0.25 சதவீதம் வட்டி குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக நீங்கள் கார் வாங்க ரூ10 லட்சம் கடனை 8.75 சதவீத கடனில் வாங்கியிருந்தால் 5 ஆண்டுக்குள் கடனை திரும்ப செலுத்த ரூ20,673 இஎம்ஐ செலுத்தி வந்திருப்பீர்கள், இனி அந்த வட்டி வகிதம் ரூ20,517 இஎம்ஐ செலுத்தினால் போது அதாவது மாதம் ரூ120 இஎம்ஐ குறைகிறது.

Repo Rate

இது நீங்கள் ரூ15 லட்சம் கடன் வாங்கியிருந்தால் 8.75 சதவீத வட்டி வகிதத்தில் வாங்கினால் நீங்கள் இதுவரை ரூ30,956 இஎம்ஐ செலுத்தி வந்திருப்பீர்கள், இது தற்பேஆது 8.50 சதவீத வட்டியாக குறைந்ததால் இதற்கு ரூ30,775 இஎம்ஐ செலுத்த வேண்டியது வரும். அதாவது ரூ181 இஎம்ஐ குறையும்.

இப்படியாக நீங்கள் வாங்கி தொகைக்கு ஏற்பட வட்டி விகிதங்கள் மாறுபடும். மேலும் நீங்கள் கடன் பெற்ற நிறுவனங்களின் எந்த திட்டத்தின் கீழ் கடனை பெற்றீர்கள் என்பதை பொறுத்தும் இந்த வட்டி வகிதங்கள் மாறுபடும். இதனால் நீங்கள் சரியான வட்டி வகிதத்தை வங்கியிடம் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் ரெப்போ வட்டி வகிதம் வாகன கடன்களுக்கு மட்டுமல்ல, வீட்டு கடன் உள்ளிட்ட மற்ற கடன்களுக்கும் பொருந்தும். ஆனால் கடன் வழங்கிய நிறுவனங்கள் எந்த முறையில் கடன் வழங்கினார்கள் என்பதை பொருத்து இது மாறபடும். ஆனால் பெரும்பாலான திட்டங்கள் ரெப்போ வட்டி வகிதத்தில் மாற்றத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் செட்டப்பில் தான் உள்ளது. இதனால் மக்கள் நேரடியாக பலன் பெறப்போகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடன்களுக்கான ரெப்போ வட்டி வகிதம் குறைந்ததால் கடன் இஎம்ஐ குறைய வேண்டும். ஆனால் சிலருக்கு அதே இஎம்ஐ தான் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கடன் தொகையில் இந்த குறைக்கப்பட்ட வட்டி வரவு வைக்கப்படலாம். இதனால் உங்களுக்கான ரெப்போ வட்டி விகித மாற்றம் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 6, 2025, 11:15 [IST]
English summary
Repo rate car loan emi relief rbi
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+