லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி... வட்டி விகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

ரிசர்வ் வங்கி கவர்னர் ரெப்போ வட்டி வகிதத்தை உயர்த்தினார். இது எப்படி ஆட்டோ மொபைல் துறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காணலாம்

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

நீங்கள் தற்போது புதிதாக கார் வாங்கும் மன நிலையில் இருக்கிறீர்களா? அல்லது பழைய காரை மாற்றி புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? தற்போது ஆட்டோமொபைல் துறை கடுமையான விலை உயர்வைச் சந்திக்கப்போகிறது. அதுவும் முக்கியமாகக் கடன் வாங்கி கார் வாங்குபவர்களுக்கு தற்போது மத்திய அரசு ஆப்பு வைத்துள்ளது. இது குறித்த முழுதகவல்களை காணலாம் வாருங்கள்

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

இந்தியாவில் தற்போது மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு உதிரிப்பாகங்கள் எதுவும் வரவில்லை. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் கார் மற்றும் பைக்குக்களை தயாரிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

உதிரிப்பாகங்களுக்கு தற்போது டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் உதிரிப்பாகங்களை விலையேற்றத்தைக் கணக்கில் கொண்டு வாகனங்களின் விலையையும் ஏற்றி வருகின்றனர். சமீபத்தில் பல வாகனங்கள் விலையேறிய செய்தியை நீங்களே படித்திருப்பீர்கள்.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

சூழ்நிலை இப்படி இருக்கையில் தற்போது வாகனங்களைக் கடன் மூலம் வாங்குபவர்களுக்கு அடுத்த ஆப்பாக மத்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் ரெப்போ வட்டி வகித்ததை 40 பேசிக் பாயிண்ட் வரை ஏற்றி நேற்று உத்தரவிட்டார்.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

அதன் படி தற்போது தற்போது 4 சதவீதமாக இருக்கும் ரெப்போ வட்டி இனி 4.40 சதவீதமாக உயர்வடையும். மேலும் பணம் ரிசர்வ் வகிதத்தை 50 பேசிக் பாயிண்ட் வரை ஏற்றி 4.50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

இந்நிலையில் இந்த வட்டி விகித உயர்வு இந்தியாவில் உள்ள எல்லா துறைகளையும் பாதிக்கவுள்ளது. அதுவும் முக்கியமாக ஆட்டோமொபைல் துறைக்கு இந்த வட்டி விகிதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் கடனின் பெயரிலேயே வாங்கப்படுகிறது. அதற்கான வட்டி விகிதம் மாறியது. அதற்கான இஎம்ஐயை உயர்த்தும்

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

கார்களை பொறுத்தவரைச் செமி கண்டெக்டர் சிப்ஸ் (Semi Conductor chips) இறக்குமதியில் இருக்கும் பிரச்சனை தொடர்பாக கார்கள் பல தயாரிக்க முடியாமல் ஆர்டர்கள் குவிந்து கார்களுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த வட்டி விகித மாற்றம் பிரச்சனையை ஏற்படுத்தும் எனப் பார்க்கப்படுகிறது.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

இருசக்கர வாகனத்தைப் பொருத்தவரை இந்த வட்டி விகித உயர்வு மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது. 0.4 சதவீதம் இருசக்கர வாகன விலைக்குக் குறைவான பணமே உயரும் ஆனால் கார்களின் விலைக்கான கடனில் அதிகமாகப் பணம் உயரும் எனப் பார்க்கப்படுகிறது. அதனால் கார் வாங்குபவர்கள் தங்கள் யோசனையை மறு பரீசிலனை செய்யத் துவங்கிவிட்டன.

லோன் வாங்கி கார் வாங்கியவர்களுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி . . . வட்டி வகிதத்தில் வந்த திடீர் மாற்றம்

ஏற்கனவே ரஷ்யா- உக்ரைன் போரால் உலகில் பல நாடுகள் ஆட்டோமொபைல் துறையில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதமும் அடுத்த தலைவலியாக வந்துள்ளது. இவற்றில் எல்லாமிருந்து மீண்டு வர ஆட்டோமொபைல் துறைக்கு வாகனத்தை விலையைக் குறைக்கும் வழியைத் தவிர வேறு வழிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிலிருந்த மீண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2022, 11:42 [IST]
English summary
Repo rate hike may make auto loans more costlier know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+