8 சக்கரங்கள் கொண்ட டிரக் கவிழ்ந்ததால் நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்... பெங்களூரில் கோரம்..!!

By Azhagar
Recommended Video - Watch Now!
Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

இந்தியாவில் சாலை போக்குவரத்தில் விபத்துகள் நடைபெறுவது குறைந்தபாடில்லை. குறிப்பாக நாட்டில் உள்ள பெருநகரங்களில் விபத்து ஏற்படாத நாட்களே இல்லை என்றே சொல்லலாம்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக உள்ள பெங்களூருவில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற ஒரு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடைபெற்ற பகுதியையும் அது நடந்த காரணங்களையும் பார்க்கும் போது, இணையதளவாசிகளிடம் இது பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

சாலையில் சென்றுக்கொண்டு இருந்த 8 சக்கரங்கள் கொண்ட பெரிய டிரக் ஒன்று, பக்கவாட்டில் கவிழ்ந்து உடன் வந்துக்கொண்டு இருந்த டொயோட்டா எட்டியோஸ் கார் மீது விழுந்து பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

டிரக் விழுந்ததன் காரணமாக, அதனுடைய எடையை தாங்க முடியாமல் செடான் மாடல் காரான எட்டியோஸ் முற்றிலும் நசுங்கியது. இது அந்த விபத்தின் தாக்கத்தை அதிகளவில் உணரச்செய்கிறது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

இதன் காரணமாக டொயோட்டா எட்டியோஸ் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் ஒருவர் மட்டுமே அந்த காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

செய்தித்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் பிரம்மாண்டமான பெரிய பேப்பர் உருளைகள் பலவற்றை சுமந்துக்கொண்டு அந்த டிரக் சாலையில் சென்றுள்ளது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

குறிப்பாக சாலையில் டிரக் செல்லும் போது அதை குறிப்பிட்ட வேகத்துடன் தான் ஓட்டுநர் செலுத்தியுள்ளார். ஆனால் வேகம் நிதானமாக இருந்தாலும் டிரக்கில் வழக்கத்தை விட அதிக எடையிருந்தது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

சாலையில் இயக்கத்தில் இருந்த டிரக்கை ஓட்டுநர் வலது புறமாக திருப்ப முயல, எடைத்தாங்காமல் டிரக் சரிந்து சாலையில் விழுந்ததாக வழக்கை விசாரித்து வரும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

அதிக எடைதாங்கமால் டிரக் விழுந்ததால், டிரக்கிற்கு ஓரமாக உடன் வந்துக்கொண்டு இருந்த எட்டியோஸ் கார் நசுங்கிப்போனது. காரின் ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

இந்தியாவில் அதிக எடையை தாங்கி சாலையில் இயக்கப்படும் லாரிகள் பல விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகின்றன. அதற்குரிய செய்திகளை நாம் தினந்தோறும் ஊடகங்களில் பார்த்து வருகிறோம்

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

இதை அரசு கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் எழுந்தாலும், போக்குவரத்து துறையில் நிலவும் ஊழல் அதை மட்டுபடுத்தி விடுவகிறது என, இந்த சம்பவத்தை கடந்து வரும் பல இணையதளவாசிகள் தங்களது கருத்தை முன்வைக்கின்றனர்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

திருப்தியளிக்கும் பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார்களில் டொயோட்டா எட்டியோஸ் மாடலும் ஒன்று. என்னதான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது அதன் எதிர்வினை இவ்வாறு தான் அமையும்.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

சமூக அக்கறையின்றி, சிலர் பொறுப்பில்லாமல் செய்யும் இதுபோன்ற தவறுகளால் நாம் அன்றாடம் சாலையில் வாகனங்கள் ஓட்டிசெல்வதே பெரிய சாகசமாகி விடுகிறது.

டிரக் அடியில் சிக்கி நசுங்கிப்போன டொயோட்டா எட்டியோஸ் கார்..!!

நாம் என்னதான் முறையாக நடந்துக்கொண்டாலும், சக மக்களும் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் ஏற்படும். அது சாலையிலிருந்தே தொடங்குவதாக நாம் கருதுவோமாக.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்..!!

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

கடந்த 22ம் தேதி பணியில் இருக்கும் பெண்களின் போக்குவரத்து தேவைக்காக தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயனாளிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி வரை ஸ்கூட்டர் பெறுவதற்காக மானிய விலைக்கு வேண்டி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

மறைந்த முதல்வர் ஜெயலித்தா அறிவித்த இத்திட்டத்திற்கான உதவித்தொகை உச்சவரம்பு 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

மகளிருக்கான இருசக்கர வாகன மானியத்தை பெறவதற்கு வேண்டியான முக்கிய 10 தகுதிகளை அரசு பட்டியலிட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் விண்ணபிக்கலாம்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

அவர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இருசக்கரத்திற்கான வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

வாகன உரிமம் இல்லாத பெண்கள் எல்.எல்.ஆர் எனப்படும் ஓட்டுநர் பயிற்சி பதிவு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

ஆதார் கட்டாயம். அவற்றுடன் இனச் சான்றிதழ், கல்வித் தகுதிச் சான்று, பணிபுரிவதற்கான சான்று மற்றும் பணியமத்தியவரிடமிருந்து சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்பிப்பது கட்டாயம்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை இருப்பின் அவற்றையும் சமர்பிக்கலாம். IFSC உடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தக்கத்தின் முதல் பக்க நகலையும் தரவேண்டும்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கான விண்ணபங்களை பெறலாம்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

தவிர, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5ம் தேதி வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

பெண்ணை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பம், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண், ஆதரவற்ற பெண்கள், திருநங்கை, மலை பிரதேசங்கள் அல்லது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பெண்கள்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

கணவனை இழந்த ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண் போன்ற தகுதிகளை பெற்ற நபர்கள் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்றுகளையும் வழங்க வேண்டும்.

அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் மானியம் பெற இந்த பத்து தகுதிகள் இருப்பது கட்டாயம்!

கியர் அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125சிசி திறன் பெற்ற வாகன விலையில் ரூ. 25,000 பயனாளிகளுக்கு மானியமாக அரசு வழங்கும். இதற்கு வேண்டிய 125சிசி திறனிற்குட்பட்ட இருசக்கர வாகனத்திற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளியையும் சான்றுகளுடன் அளிக்க வேண்டும்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Accident In Bangalore On Republic Day - Truck Topples And Crushes Toyota Etios. Click for Details...
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more