Just In
- 10 hrs ago
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- 11 hrs ago
நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!
- 11 hrs ago
இந்தியாவில் கால் தடம் பதிக்கும் சீன நிறுவனம்... சூப்பர் சூப்பரான டூ-வீலர்களை களமிறக்க போவதாக அறிவிப்பு!
- 13 hrs ago
ரொம்ப பெரிய விஷயம்... பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் விற்பனையில் சாதனை படைத்த கியா!
Don't Miss!
- News
"நொறுங்கும் பிளான்?".. இன்று சென்னை வருகிறார் திரௌபதி முர்மு.. அவங்க 2 பேரும் தனித்தனியா வர்றாங்களாமே
- Finance
பிளாஸ்டிக் தடை அமல்... முதல் நாளிலேயே இத்தனை கிலோ பறிமுதலா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- Movies
நாசருக்கு சினிமா தான் மூச்சு.. வதந்தியை பரப்ப வேண்டாம்.. டென்ஷனான கமீலா நாசர்!
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் போட்டியாக வந்துவிட்டது ஹைட்ரஜன் வாகனங்கள்... இனிமே இதற்குத் தான் எதிர்காலம்...
2027ம் ஆண்டிற்குள் ஹைட்ரஜன் வாகனங்களில் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல் /டீசல் விலை ஏறிக்கொண்டே செல்வதால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

குறிப்பாக முழு சார்ஜில் குறைவான கிலோ மீட்டர் தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயணிக்கும். அதனால் நீண்ட தூர பயணிகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவாது. உள்ளூர் பயணங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பம் பயனுள்ளதாக இருந்தாலும் பெரிய அளவில் இன்ஃப்ரா இல்லை என்பதால் இதிலும் சிக்கல் இருக்கிறது.

பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை முதலீடு செய்து கட்டமைக்க முதலீட்டாளர்கள் போதுமான அளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை என்கிறார்கள். எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் போதுமான அளவு சார்ஜிங் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் இல்லை என மக்கள் கருதுகிறார்கள். இதனால் இது பெரும் தலைவலியாக இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் புதிய வகையாக ஹைட்ரஜன் வாகனங்கள் மார்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. ஹைட்ரஜன் வாகனம் என்றால் பெட்ரோல்/டீசல் போல வாகனத்தின் எரிபொருளாக ஹைட்ரஜனை நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த ஹைட்ரஜன் நேரடியாக ஆக்ஸிஜனுடன், அப்பொழுது நடக்கும் வேதியல் மாற்றத்தால் கரெண்ட் உருவாகும்.

இந்த கரெண்ட் ப்யூயல் செல் வழியாக எலெக்டரிக் மோட்டாருக்கு செல்லும் தற்போது பேட்டரி பவர் மூலமாக எப்படி வாகனம் இயங்குகிறதோ அப்படி தான். இந்த வாகனமும் இயங்கும். இந்த வாகனங்கள் குறித்து சீமபத்தில் ஜூனிப்பர் ரிசர்ச் என்ற குழு ஆய்வு ஒன்றைச் செய்தனர். அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின்படி வரும்காலத்தில் ஹைட்ரஜன் வாகனத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். 2027ம் ஆண்டு மிக அதிகமான அளவில் ஹைட்ரஜன் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும், இதற்காகத் தயாரிப்பாளர்கள் ஹைட்ரஜன் வாகனங்களைக் குறைவான விலையிலும், நீண்டதூரம் பயணிக்கும் வகையிலும் நல்ல உழைப்பைத் தரும் வகையிலும், அதிக பாரம் எற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களாகவும் தயாரிக்க வேண்டும். எனக் கூறியுள்ளனர்.

தற்போது பல நிறுவனங்கள் கமர்ஷியல் ஹைட்ரஜன் வாகனங்களைத் தயாரிக்க முனைப்புக்காட்டி வருகின்றனர். இந்த வாகனங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் 70 ஆயிரம் டாலர் வரையிலான விலையில் இந்த வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். இது நுகர்வோருக்கு முதலீட்டை அதிகரிக்கும் என்பதால் வாங்க மறுக்கின்றனர்.

ஆனால் பேட்டரி எலெக்டரிக் வாகனங்களுக்கு மாற்றாக தற்போது ஹைட்ரஜன் வாகனங்கள் மட்டுமே இருக்கிறது. கார் தயாரிப்பாளர்களாகின ஹூண்டாய், டொயோட்டா, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் ஹைட்ரஜன் வாகன தயாரிப்பிற்கு ஒரு பெரும் முதலீட்டைச் செய்துள்ளனர்.

ஹைட்ரஜன் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பொதுவான எரிபொருள் நிரப்பும் ஸ்டேஷன்கள் இல்லை என்பது முக்கியமான காரணமாக இருக்கும் ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் இதை எளிதாகச் சரி செய்து விட முடியும். இந்த ஹைட்ரஜன் வாகன தொழிற்நுட்பம் பெரும்பாலும் மாற்று எரிபொருள் கொண்ட கனரக வாகனங்களில் அதிகமாகக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது உலக அளவில் வெறும் 60 ஆயிரம் வாகனங்கள் தான் ஹைட்ரஜன் வாகனங்களாக உள்ளன. இது அடுத்தடுத்து நிகழவுள்ள மாற்றங்களில் வரும் 2027 ஆண்டு 10 லட்சம் வாகனங்களாக உயரமும் மெல்ல மெல்ல ஹைட்ரஜன் வாகனங்களில் தேவை இந்த உலகிற்குப் புரியவரும். அதன் பின் பயன்பாடு நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும்.