சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

எலிகளுக்கு கார் ஓட்ட ஆராய்ச்சியாளர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

எலிகள் மிகவும் புத்தி கூர்மை உடையவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் பெரும்பாலான மக்கள் நினைத்து கொண்டிருப்பதை காட்டிலும் எலிகள் 'ஸ்மார்ட்' ஆனவை என்ற விஷயம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு ஆராய்ச்சியின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

சிறு கார்களை எலிகள் ஓட்டி வருகின்றன என்ற விஷயத்தை உங்களால் நம்ப முடிகிறதா? நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் இந்த விஷயம் உண்மைதான். பொதுவாக பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் எலிகளைதான் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தற்போது எலிகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக சிறிய கார்களை ஓட்டி சென்று உணவை சேகரிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மூலமாக எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. எலிகளும் அதனை அழகாக செய்துள்ளன. எலிகள் ஓட்டுவதற்கு என பிரத்யேகமாக சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக் கண்டெய்னர் உதவியுடன் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

இதன் சக்கரங்களுக்கு மேலே பாடி போன்று பிளாஸ்டிக் கண்டெய்னர் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 3 காப்பர் பார்களும் வழங்கப்பட்டுள்ளன. இடது பக்க காப்பர் பாரை எலிகள் தொட்டால், கார் இடது பக்கம் செல்லும். அதே சமயம் வலது பக்கம் உள்ள காப்பர் பாரை எலிகள் தொட்டால், கார் வலது பக்கமாக பயணிக்கும். மையத்தில் உள்ளதை தொட்டால், கார் நேராக செல்லும்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

இந்த வாகனத்தின் அடிப்பகுதி அலுமினியத்தால் ஆனது. நான்கு சதுர மீட்டர் பரப்பளவிலான செவ்வக வடிவ பரிசோதனை கூடத்தில், எலிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயிற்சி வழங்கியுள்ளனர். 11 ஆண் எலிகள், 6 பெண் எலிகள் என மொத்தம் 17 எலிகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த பரிசோதனையை செய்துள்ளனர்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

இதில், எலிகள் மிக அழகாக காரை ஓட்டியுள்ளன. அந்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதால், உலக மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதில், மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், டிரைவிங் செய்வதன் மூலம் எலிகள் 'ரிலாக்ஸ்' ஆன உணர்வை பெறுகின்றன. டிரைவிங் என்றாலே மனிதர்கள் பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாகதான் உள்ளது.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

ஆனால் எலிகள் மிகுந்த ஆர்வத்துடன் டிரைவிங்கை கற்று கொண்டுள்ளன. அத்துடன் இதன் மூலமாக அவை புத்துணர்ச்சியையும் பெறுகின்றன என்றால், மிகவும் ஆச்சரியமாகதான் இருக்கிறது. பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட எலிகளின் ஹார்மோன் அளவை கணக்கீடு செய்ததன் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

அதாவது மன அழுத்தத்தை உண்டாக்கும் Corticosterone எனும் ஹார்மோன் குறைவாக இருந்துள்ளது. அதேசமயம் மன அழுத்தத்தை எதிர்க்கும் Dehydroepiandrosterone எனும் ஹார்மோன் அதிக அளவில் இருந்துள்ளது. எனவே எலிகள் 'ரிலாக்ஸ்' ஆன உணர்வை பெற டிரைவிங் உதவுகிறது என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

டிரைவிங் போன்ற சிக்கலான பணிகளின் செயல்திறன் மூளையை எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்து, அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதிய ஆராய்ச்சி ஒன்றை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பதற்றம் மற்றும் மன சோர்வுக்கு சிகிச்சை வழங்கும் ஆகச்சிறந்த வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக டிரைவிங் போன்ற சிக்கலான பணிகளை எலிகளால் கையாள முடியுமா? என்பதை பரிசோதனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதன் காரணமாகதான் எலிகளை சிறிய காரை ஓட்ட வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அனைவரும் ஆச்சரியப்படும்படியான விஷயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

மனிதனின் மூளையை புரிந்து கொள்வதற்கு எலிகளை வைத்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் சிறந்தது என ரிச்மாண்டு பல்கலைகழகத்தின் பிஹேவியரல் நியூரோசயின்ஸ் பேராசிரியர் டாக்டர் கெல்லி லம்பெர்ட் கூறியுள்ளார். ஏனெனில் நாம் பெற்றுள்ளதின் சிறிய வெர்ஷனுடன் எலிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர்... எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுக்கும் ஆராய்ச்சியாளர்கள்... எதற்காக தெரியுமா?

எலிகள் கார் ஓட்டுவதை என்னதான் வார்த்தைகளால் விவரித்தாலும், அதை கண்களால் காண்பதற்கு ஈடாகாது என்பது என்னவோ உண்மைதான். ஆச்சரியம் அளிக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மோட்டார் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை கண்டறியவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பரிசோதனைகள் உதவக்கூடும் என நம்பப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Researchers Train Rats To Drive Tiny Cars: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X