இப்பவே புக் பண்ணா விலை ரொம்ப கம்மி, ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் பற்றி வெளியான புதிய அப்டேட்!

ஓலா நிறுவனம் தனது எஸ்1 எர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை விபரங்களையும் விலையையும் அறிவித்துள்ளது. அதன்படி முன்னரே புக் செய்பவர்களுக்கு ரூபாய் 10,000 விலை குறைவாகவும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான, தெளிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்தது. ஏற்கனவே எஸ் 1 ப்ரோ மற்றும் எஸ்1 ஆகிய எெலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போது அதைவிடச் சிறிய ஸ்கூட்டராக எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ola s1 Air purchase window

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மற்ற நிறுவனங்களை விட அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. சொல்லப்போனால் பெரும்பாலான பெட்ரோல் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி ஓலா நிறுவனத்தின் எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பர்ச்சேஸ் விண்டோ வரும் 28ஆம் தேதி ஓப்பன் ஆகிறது.

ola s1 Air purchase window

வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த ஓலா எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும். அவர்களுக்கு இந்த ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1,09,999 என்ற அறிமுக விலையில் விற்பனை செய்யப்படும்.

மற்றவர்கள் ஜூலை 31ஆம் தேதி முதல் தங்களது ஓலா எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூபாய் 1,19,999 என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூடிரை வாங்க தற்போது புக்கிங் செய்யலாம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ola s1 Air purchase window

இந்நிலையில் இந்த ஸ்கூட்டருக்கான டெலிவரி தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி ஆகஸ்ட் மாதம் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக முன்பதிவு செய்தவர்கள் யார் என்கிற செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓலா எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பொருத்தவரை மூன்று பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 125 கிலோமீட்டர் வரை பயணிக்கும் எனச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த மோட்டாரின் பவரும் குறைவாக இருக்கிறது. 2.7 கிலோ வாட் சாதாரண பவராகவும் உச்சபட்சமாக 4.5 கிலோ வாட் பவரையும் வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்கூட்டராக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பலருக்கு இந்த ஓலா எஸ் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மிகக்குறைவான விலையில் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படும் எனப் பலர் நினைத்திருந்த நிலையில் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தைக் குறைத்ததால் இதன் விலையை அதிகப் படுத்த வேண்டிய கட்டாயம் ஓலாவிற்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது விற்பனையைப் பெரிய அளவில் பாதிக்காது என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 21, 2023, 19:25 [IST]
English summary
Reserve now for s1 air at a 10k low price from july 31 price is 1 19 lakhs deliveries in august
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X