திருச்சூர்ல பிஜேபி ஜெயிச்ச நியூஸே ஒன்னுமில்லாம ஆகிருச்சு.. ரேஷ்மி நாயருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா!
சமூக வலைதளத்தில் மிகவும் அறியப்படும் பிரபலங்களில் ரேஷ்மி நாயர்-ம் ஒருவர் ஆவார். இவர் மாடலிங் துறையிலும் கால் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிரபலத்திற்கே, தற்போது திருச்சூரில் பிஜேபி கால் தடம் பதித்த நியூஸையே ஒன்னுமில்லாமல் ஆக்கக் கூடிய ஓர் நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அது வேறு ஒன்றும் இல்லைங்க. இந்த பிரபலத்திற்கு அவருடைய கணவர் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர வகை காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். அதுவும் அவருக்கு பிடித்த சிவப்பு நிறத்திலேயே அவர் வாங்கிக் கொடுத்திருக்கின்றார்.
மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) சொகுசு ஹேட்ச்பேக் காரையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். பிறந்தநாள் பரிசாகவே இந்த காரை கணவர் பசுபாலன் வாங்கிக் கொடுத்திருக்கின்றார். இந்த தகவலை ரேஷ்மி நாயரும் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

"எனது பிறந்தநாளில் எனக்கு இந்த சூப்பரான கார் பரிசை வழங்கிய அன்பான கணவருக்கு நன்றி' என சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய தகவலை ரேஷ்மி பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவருடைய பதிவில் ரேஷ்மி நாயரின் ரசிகர்கள் பலர் அவருக்கு பாராட்டு மழையை பொழிந்த பண்ணம் இருக்கின்றனர்.
ரேஷ்மி நாயர் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவராக அறியப்படுகின்றார். இதேபோல், அடிக்கடி வெளியூர்களுக்கும் அவர் சுற்றுலா சென்ற வண்ணம் இருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) டீசல் கார் மாடலை ரேஷ்மி வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அது மெல்போர்ன் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு கார் மாடல் ஆகும். இதைப் போலவே அவருடைய முந்தைய பிஎம்டபிள்யூ கார் மாடலும் சிவப்பு நிறத்திலானதே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவருடைய சிவப்பு நிற கார்கள் வரிசையில் தற்போது புதிய மினி கூப்பர் எஸ் சேர்க்கப்பட்டு உள்ளது.
ஆனால், இது புத்தம் புதியது அல்ல. ஆமாங்க, ரேஷ்மிக்கு அவருடைய கணவர் பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் மினி கூப்பர் எஸ் சொகுசு ஹேட்ச்பேக் கார் யூஸ்டு கார் ஆகும். இருப்பினும் அந்த கார் பார்க்க புத்தம் புதியது போல் தெரிகின்றது. மேலும், இது ஓர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட வாகனமாகும்.
2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே மினி கூப்பர் எஸ் கார் மாடல் கொண்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் உதவியாலே இந்த அதிகபட்ச பவரை அது வெளியேற்றுகின்றது.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகம் ஆகும். இதுதவிர, இதனால் வெறும் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் அடைய முடியும். இதன் மைலேஜ் திறனும் அபரீதமானதாக உள்ளது. அதிகபட்ச வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த கார் லிட்டர் ஒன்றிற்கே 16.58 கிமீ வரையில் மைலேஜ் தர கூடியதாக இருக்கின்றது.
ரேஷ்மிக்கு பரிசளிக்கப்பட்டு இருப்பது பயன்படுத்திய கார் என்பதால் அதன் துள்ளியமான மதிப்பு விபரங்கள் தெரியவில்லை. அதேவேளையில், புதிய மினி கூப்பர் எஸ் சுமார் ரூ.53.33 லட்சதிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தமிழ் சினிமா திரையுலகிலும் மினி கூப்பர் கார் மாடலை ஒரு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அதில் எஸ்டிஆர்-ம் அடங்குவார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் சமூக வலைதள பிரபலங்களில் ரேஷ்மி நாயரும் ஒருவர் ஆவார். இவருக்கே அவருடைய ஆசை கணவர் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி அசத்தி இருக்கின்றார். இந்த கார் பரிசளிப்பால் அவர் தற்போது மிகவும் பலமடங்கு மகிழ்ச்சியில் இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








