40 வருஷ பழைய காருனு யாருமே சொல்ல மாட்டாங்க.. மரணத்தின் விளிம்பில் இருந்த காரா இது! ஷோரூம் கன்டிஷன்ல இருக்கு!

ஃபியட் பிரீமியர் பத்மினி (Fiat Premier Padmini), இந்த பெயரை அறியாத கார் காதலர்களே இருக்க முடியாது. இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் செழித்துக் காணப்பட்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். முக்கியமாக 1970 மற்றும் 80-களில் சாலையில் அதிகம் காணப்பட்ட கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. ஹிந்துஸ்தான் அம்பாசடர் போன்ற ஜாம்பவான் கார் மாடல்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பணமாக விளங்கிய கார் மடாலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆகையால், இப்போது இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருந்து முழுமையாக மறைந்த நிலையில் உள்ளது. இருப்பினும், நாட்டின் ஏதேனும் ஓர் மூலையில் கார் காதலர்கள் சிலரால் பாதுகாப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே 40 ஆண்டுகள் பழைய பிரீமியர் பத்மினி கார் ஒன்று வாகன காதலர் ஒருவரால் அழிவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Restoration of iconic fiat premier padmini

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்த காரை புதிது போல் மீட்டெடுத்து, அதற்கு மறு வாழ்க்கை கொடுத்திருக்கின்றார். பெரும்பாலான பிரீமியர் பத்மினி கார்கள் காயிலான் கடைக்கு எடைக்கு போடப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டன. இந்த மாதிரியான சூழலிலேயே பிரீமியர் பத்மினி புதிதுபோல் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

இது பலரின் மனதைக் கவரக் கூடியதாக தகவலாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஷோரூம் கன்டிஷனுக்கு அந்த கார் புதிதுபோல் மாற்றப்பட்டு இருப்பது அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. துரு, சொட்டை மற்றும் பொலிவற்ற தன்மை என அழியும் நிலைக்கே சென்றுவிட்ட நிலையில் இந்த கார் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

பழைய துருப்பிடித்த பாகங்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய பாகங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பாடி பேனலில் துருப்பிடித்திருந்த அந்த குறிப்பிட்ட பகுதி மற்றும் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய உலோகம் அங்கு பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சொட்டைகளும் அகற்றப்பட்டு அங்கு பட்டி-டிங்கரிங் வேலைகள் மிக சிறப்பாக பார்க்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக காருக்கு அதே வெள்ளை நிற பூச்சுச் செய்யப்பட்டு இருக்கின்றது. உருவத்தில எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே மீட்டெடுத்திருக்கின்றனர். அதாவது, 70 மற்றும் 80களில் இந்த கார் எப்படி விற்கப்பட்டதோ அதைப் போலவே இப்போதும் உள்ளது. இது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே எடுத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ளது.

Restoration of iconic fiat premier padmini rear look

காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் புதிதுபோல் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. குஷன் இருக்கை, ப்ளூர் மேட், பக்கவாட்டு பேனல்கள் உள்ளிட்டவை புத்தம் புதிதாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த கார் மீண்டும் ஒரு முறை நம்மை 1970 மற்றும் 80களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவில் இதுபோன்று பழைய வாகனங்கள் புதிதுபோல் மாற்றப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. பழைய அம்பாசடர் கார், டாடா சியாரா கார் என பலதரப்பட்ட வாகனங்கள் அழிவின் விளம்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய சம்பவமாக பிரீமியர் பத்மினி நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க்: 40 ஆண்டுகள் பழைய காரா இது என்றே பலரையும் இந்த கார் மீட்டெடுப்பு சம்பவம் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. அந்த அளவிற்கே நேர்த்தியான வகையில் கார் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. கை தேர்ந்த நபர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது இதன் வாயிலாக தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 15:15 [IST]
English summary
Restoration of nearly 40 year old fiat premier padmini showcases timeless craftsmanship
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X