மது போதையில் இருந்த போக்குவரத்து காவலர்களை வச்சு செஞ்ச ராணுவ அதிகாரி..!!

Written By:

போக்குவரத்து போலீசார் இருவர் மது அருந்திவிட்டு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றாக கூறி வெளியான ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து போலீசார் இருவர் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் அந்த போலீசார் இருவரும் சோதனை நடத்தினர்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

பைக்கில் வந்த அந்த ரைடர் பணியின் போது போலீசார் குடித்திருப்பதை சுட்டிக்காட்டி விட்டு, தான் ஒரு ராணுவ அதிகாரி என்று கூறியுள்ளார்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

மேலும் அந்த முன்னாள் இராணுவ அதிகாரி, அங்கே நடைபெற்ற சம்பவத்தை தனது கைப்பேசியில் வீடியோ எடுக்க தொடங்கினார்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த போலீசார் இருவரும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு ரூ.500யை லஞ்சமாக கொடுக்க முயன்றனர். மேலும் இந்த சம்பவத்தை இப்படியே விட்டு விடும்படியும் கேட்டுக்கொண்டனர்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீசார் இருவரும் கெஞ்சுவது, மற்றும் அவருக்கு லஞ்சம் கொடுக்க முயல்வது என அனைத்து வீடியோவில் பதிவாகின.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

இது ஒரு புறம் நடந்துக்கொண்டு இருக்க, மற்ற பல போக்குவரத்து காவலர்களும் சம்பவ இடத்தை சூழ்ந்துகொண்டனர். குறிப்பாக செவர்லே டவரே ரோந்து காரில் இருந்து இறங்கி வந்த ஒரு காவல்துறை அதிகாரி, ராணுவ அதிகாரியை பார்த்து எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

வாகன ஆய்வு சரிபார்க்கும் இடத்தில் தனக்கு போலீசாரிடம் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் முழு நிகழ்வையும், தனது கைப்பேசியில் முன்னாள் ராணுவ அதிகாரி பதிவு செய்துள்ளார்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது தெரியவந்தால், ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும் என்பது விதி. மேலும் அதனால் சிறை செல்லக்கூட நேரிடலாம்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

வாகனம் ஓட்டும் நபர் குடித்துவிட்டு விபத்து நேர்ந்தால், வாகனத்தை இன்சூரன்ஸ் செய்திருந்தால் கூட அது மது அருந்திய காரணத்தால் பயனளிக்காமல் போய்விடும்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

போக்குவரத்திற்கான விதிகள் இவ்வாறு இருக்க, அதை நெறிப்படுத்த வேண்டிய காவலர்களே மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த ஹரியானா சம்பவத்திற்கு பல இணையதளவாசிகள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

இதை பார்க்கும் உயர் அதிகாரிகள் விதிமீறல் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் எனவும் இணையதள பயன்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

குடித்துவிட்டு போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் என்றும், இதனால் விதிகளை சரியாக பின்பற்றுவர்கள் கூட பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனம்.

மது போதையில் காவலர்கள்... ஆப்பு வைத்த ராணுவ அதிகாரி..!!

சமீப காலங்களில் காவல்துறையின் அத்துமீறிய செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் பகிர்ந்து வரும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: A Retired Army Officer Took On a Couple for Drunk Cops at Harayana. Click for Details...
Story first published: Friday, December 1, 2017, 10:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark