காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் விமான வீடு.. வருஷ கணக்கில் வாழ்ந்து வரும் நபர்.. அட இது நிஜ விமானமா!
விமானங்கள் மனிதர்களின் போக்குவரத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறி இருக்கின்றன. ஒரு சிலர் தற்போது விமானங்களையே லோக்கல் பேருந்து போல தங்களின் பயணங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவிற்கு மிக முக்கியமான போக்குவரத்தாகவும், எளிமையான போக்குவரத்தாகவும் விமானங்கள் தற்போது மாறி உள்ளன.
இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் நபர் பிரமாண்ட தோற்றம் கொண்ட விமானத்தையே வீடாக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதில் பல ஆண்டுகளாக அவர் குடித்தனம் நடத்தி வருவதகாவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ட்லேண்ட், ஓரிகானைச் சேர்ந்தவர் ப்ரூஸ் கேம்பெல்.

73 வயதான இவர் ஓர் ஓய்வு பெற்ற எலெக்ட்ரிக்கல் எஞ்ஜினியர் ஆவார். எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் திறன் கொண்டவர் இவர் ஆவார். இதற்கு சான்றாகவே அவரின் விமான வீடு இருக்கின்றது. விமான வீடு என்ற உடன் செங்கல், சிமெண்டில் உருவாக்கப்பட்ட விமான வீடு என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
இது ஓர் உண்மையான விமானம் ஆகும். ஒரு காலத்தில் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானத்தையே அவர் வீடாக மாற்றி இருக்கின்றார். போயிங் 727 விமானத்தையே அவர் சகல வசதிகள் கொண்ட வீடாக மாற்றி இருக்கின்றார். இந்த விமானத்தில் ஏறத்தாழ 200க்கும் அதிகமானோரால் அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய பிரமாண்ட விமானத்தையே ப்ரூஸ் வீடாக மாற்றி உள்ளார். அவர் விமானத்தை மட்டும்தான் வீடாக மாற்றியிருக்கின்றாரா என பார்த்தால், அதுதான் இல்லை. அந்த நபர் ஓர் சிறிய காடையே தான் வசிக்கும் இருப்பிடமாக மாற்றி இருக்கின்றார். தன்னுடைய 20 வயதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஓர் இடத்தை ப்ரூஸ் வாங்கி இருக்கின்றார்.
அந்த இடமே தற்போது மினி ஃபாரஸ்டைப் போல அதிக மரங்கள் நிறைந்ததாகக் மாறி இருக்கின்றது. அந்த மரங்களுக்கு இடையிலேயே ஹார்ட்-இன் போல இடத்தை காலியாக்கி அதற்கு மத்தியில் தன்னுடைய விமான இல்லத்தை ப்ரூஸ் நிலை நிறுத்தி இருக்கின்றார். ஒரு காலத்தில் ஒலிம்பிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின்கீழ் பணியாற்றி வந்த விமானமே இந்த ஏர்பஸ் 727 ஆகும்.

ஆனால், அது தற்போது ப்ரூஸின் இல்லமாக மாறி இருக்கின்றது. உலகின் மிகவும் தனித்துவமான வீடாகவும் இது காட்சிளிக்கின்றது. 1999 ஆம் ஆண்டிலேயே இந்த விமானத்தை அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கொடுத்தே இந்த ஓடாத விமானத்தை அவர் வாங்கி இருக்கின்றார்.
ஆனால், அவருடைய இருப்பிடத்திற்கு கொண்டு வருவதற்கு மட்டும் கூடுதலாக 1.20 லட்சம் அமெரிக்க டாலர்களை ப்ரூஸ் தனியாக செலவழித்து இருக்கின்றார். ஆகையால், ஒட்டுமொத்தமாக 2.20 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அந்த போயிங் 727 வாங்கப்பட்டு இருக்கின்றது. கிரீஸின் ஏதென்ஸிலிருந்து விமானத்தை ஓரிகனுக்குக் கொண்டு வந்ததனாலேயே இந்த அளவு பெரும் செலவு அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால், இதற்கு செலவு செய்த ஒவ்வொரு டாலரும் ஒர்த்தானது என அவர் நம்பியிருக்கின்றனர். நம்மையும் அப்படியே அவரின் செயல் உணர வைக்கின்றது. வசிப்பதற்கு ஏற்றதாக விமானத்தை மாற்ற சில மாற்றங்களை போயிங் 727-னின் உட்பகுதியில் ப்ரூஸ் செய்திருக்கின்றார். இதனாலேயே வழக்கமான விமானங்களில் இருந்து இந்த விமானம் மாறுபட்டுக் காட்டியளிக்கின்றது.
மேலும், விமானத்தை அவர் மரத்தாலான கட்டைகள் மீதே நிற்க வைத்திருக்கின்றார். வீல்கள் இருந்தும் அவர் மரக் கட்டைகளைப் பயன்படுத்தி இருக்கின்றார். சமதளம் அல்லாத தரைப் பகுதி என்பதனால் இவ்வாறு செய்திருக்கின்றார். மேலும், விமானத்தில் ஏறி, இறங்குவதற்கு என தனியாக ஏணிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, தனியாக உறங்கும் இடம், கழிவறை, சமையலறை, வாஷிங் மெஷின், மீட்டிங் பகுதி என சகல வசதிகள் விமானத்தில் உட்பக்கத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை உணவமாக மாற்றப்பட்டு இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதைப் போலவே ப்ரூஸ் தன்னுடைய இல்லமாக விமானத்தை மாற்றி இருக்கின்றார். முன்னதாக இவரின் விருப்பம் ஓர் கப்பலை வீடாக மாற்றுவதாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









