இந்தியா வேணாம்னு இங்கிலாந்து போனவரு! அந்த நாட்டின் பெரிய மனுஷங்கள்ல இவரும் ஒருத்தரு! இவ்ளோ காரை வச்சிருக்காரா!
தாய் நாட்டை வேண்டாம் என உதறிவிட்டு வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களில் ரியூபன் சிங்-ம் ஒருவர் ஆவார். இவர் தன்னுடைய உழைப்பால் இங்கிலாந்து நாட்டின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கின்றார். நல்ல பிசினஸ் மேன்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்பதற்கு சான்றாக இவரின் வளர்ச்சி இருக்கின்றது. 1990இல் இவரின் அதீத வளர்ச்சியையும், திறனையும் கண்டு வியந்துபோன இங்கிலாந்து அரசாங்கம், அவரை அழைத்து தங்கள் நாட்டின் சிறு தொழில்துறைக்கு அட்வைசராக நிர்ணயம் செய்தது.
ரியூபன் சிங்-கின் மிஸ் ஆட்டியூட் (Miss Attitude) விற்பனையகம் அதீத வளர்ச்சியைப் பெற்றதை அடுத்தே அப்போதைய பிரதமர் டோனி பிளையர், அவரை சிறு வணிகங்கள் குறித்த அரசாங்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இணைத்தார். இத்தகைய மாபெரும் வளர்ச்சியைக் கண்டவரே ரியூபன் சிங்.

இவர், ஆல் டே பிஏ (allday PA) மற்றும் ஐஷர் கேபிடல் (Isher Capital) ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரியாக உள்ளார். ரியூபன் சிங், மாபெரும் பிசினஸ் மேன் மட்டுமல்ல மிகப் பெரிய கார் காதலும் ஆவார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் ஆடம்பர கார்களையே மிக மிக அதிக எண்ணிக்கையில் அவர் வைத்திருக்கின்றார். அதாவது, இவரிடத்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை எண்ண நம்முடைய கைகளில் உள்ள விரல்கள் போதாது என்று கூறப்படுகின்றது. மேலும், ஒரே ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடலை ஒன்றிற்கும் மேற்பட்ட யூனிட்டுகளை அவர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
அதேநேரத்தில், அவரிடத்தில் எத்தனை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கின்றன என்பது யாரும் அறியாத ஒன்றாகவும் உள்ளது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி அவரிடத்தில் 13 முதல் 35 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கலாம் என தெரிகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்கள் மட்டுமே இத்தனை எண்ணிக்கையில் அவர் வைத்திருக்கின்றார்.
இதுதவிர வேறு சில சொகுசு கார் பிராண்டுகளின் வாகன மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவில் எப்படி முகேஷ் அம்பானி நூற்றுக் கணக்கில் ஆடம்பர கார்களை வைத்திருக்கின்றாரோ, அதைப் போலவே ரியூபன் சிங்கும் இங்கிலாந்து நாட்டில் நூற்றுக் கணக்கான சொகுசு மற்றும் அரிய வகை கார்களை பயன்படுத்தி வருவதாக இணையத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிற்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இடபிள்யூ VIII (Phantom EWB Vlll) கார் மாடலையே ரியூபன் சிங் பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமல்ல ரோல்ஸ் ராய்ஸின் பிற தயாரிப்புகளான கல்லினன் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் (Cullinan Series 2 Black Badge), 3 ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் கார்கள் (Spectre EVs), 4 கல்லினன் பிளாக் பேட்ஜ் (Cullinan Black Badge) ஆகியவற்றையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இதேபோல், புகாட்டி வெரேன் கிராண்டு ஸ்போர்ட் (Bugatti Veyron Grand Sport), போர்ஷே 918 ஸ்பைடர் (Porsche 918 Spyder), பகானி ஹுவார்யா (Pagani Huayara), லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) மற்றும் லிமிடெட் எடிசன் ஃபெர்ராரி எஃப்12 பெர்லினெட்டா (limited edition Ferrari F12 Berlinetta) ஆகிய கார் மாடல்களையும் ரியூபன் சிங் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்து நாட்டில் உள்ள முக்கியு புள்ளிகளில் ரியூபன் சிங்-ம் ஒருவர் ஆவார். இவர் தன்னுடைய சிறு வயது முதலே இங்கிலாந்து நாட்டிலேயே வசித்து வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய தலையில் கட்டும் தலைப்பாகை நிறத்துடன் பொருந்தக் கூடிய வண்ணங்களைக் கொண்ட கார்களை அவர் வைத்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









