எல்இடி இன்டிகேட்டர்களுடன் கூடிய பைக் ரைடர்களுக்கான ஜாக்கெட்- சூப்பர்மா...!!

Posted By:

எல்இடி இன்டிகேட்டர்களுடன் கூடிய பைக் ரைடர்களுக்கான ஜாக்கெட்டை அமெரிக்காவை சேர்ந்த இம்பல்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த புதிய எல்இடி இன்டிகேட்டர் ஜாக்கெட் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்டிகேட்டர் விளக்குகள்

இன்டிகேட்டர் விளக்குகள்

இந்த ஜாக்கெட்டில் நான்கு இடங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பைக் இன்டிகேட்டர் சுவிட்ச் அல்லது பிரேக் பிடிக்கும்போது இந்த ஜாக்கெட்டில் இருக்கும் எல்இடி விளக்குகள் ஒளிரும்.

கன்ட்ரோல் யூனிட்

கன்ட்ரோல் யூனிட்

இந்த ஜாக்கெட்டில் இருக்கும் பிராக்ஸிமிட்டி கன்ட்ரோல் யூனிட் மூலமாக, கம்பியில்லா இணைப்பு முறையில் செயல்படும். இன்டிகேட்டர் சுவிட்சை ஆன் செய்யும்போது பைக் திரும்பும் திசையில் இந்த எல்இடி விளக்குகளும் சேர்ந்து ஒளிரும். இதேபோன்று, பிரேக் பிடிக்கும்போது பைக்கில் இருக்கும் டேஞ்சர் லைட்டுடன் சேர்ந்து இந்த ஜாக்கெட்டின் பின்புறத்தில் இருக்கும் டேஞ்சர் லைட்டும் சேர்ந்து ஒளிரும். இதன்மூலம், பின்னால் வரும் வாகனங்கள் பைக் செல்லும் திசையையும், பிரேக் பிடிப்பதையும் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

இந்த ஜாக்கெட்டில் இருக்கும் எல்இடி விளக்குகள் பேட்டரியில் இயங்குகின்றன. மேலும், இந்த பேட்டரிகளை எளிதாக சார்ஜ் செய்ய முடியும். அத்துடன், பைக்கைவிட்டு இறங்கியவுடன், இந்த பேட்டரி தானாக அணைந்துவிடும். இதன்மூலம், பேட்டரியிலிருந்து மின்சார இழப்பு தவிர்க்கப்படும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ரைடர் கீழே விழுந்தால், ஜாக்கெட்டின் தோள் பட்டைக்கான பகுதியில் கூடுதல் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம், சிராய்ப்புகளை வெகுவாக தவிர்த்துக் கொள்ளலாம்.

ஆபத்து காலங்களில்...

ஆபத்து காலங்களில்...

ஒருவேளை ரைடர் கீழே விழுந்துவிட்டால், இந்த ஜாக்கெட்டில் இருக்கும் அனைத்து எல்இடி விளக்குகளும் ஒளிரத் துவங்கிவிடும். இதன்மூலம், பின்னால் வரும் வாகனங்கள் எளிதாக கண்டு கொள்ள முடியும்.

உயர்வகை ஜாக்கெட்டுகள்...

உயர்வகை ஜாக்கெட்டுகள்...

இந்த பைக் ரைடர்களுக்கான ஜாக்கெட்டுகள் உயர் வகை தோலினால் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த சயீத் லெதர்ஸ் நிறுவனம் இந்த ஜாக்கெட்டுகளை இம்பல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து கொடுக்கிறது.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.33,000 விலை கொண்டது இந்த எல்இடி ஜாக்கெட்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Impulse Jacket wirelessly communicates with your motorcycle's braking and turn signal systems to increase your visibility while riding.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark