திடீர்னு உயிரிழந்த நடிகரின் காதலியா இது! கோர்ட்ல அறிக்கை தாக்கலானதும் காரை எடுத்துட்டு கோயிலுக்கு வந்துட்டாங்க
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் (Sushant Singh Rajput). எம்.எஸ். டோனி: தி அன்டோல்டு ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக, தமிழகம் உள்பட இந்தியா முழுக்க பிரபலமான நடிகர்களில் ஒருவராக சுஷாந்த் சிங் ராஜ்புட் மாறினார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறியப்பட்ட நிலையில், அவரது தற்கொலை இந்தியா முழுக்க பேசு பொருளானது.
அத்துடன் இது தற்கொலை அல்ல எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் இந்த விவகாரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலியான ரியா சக்கரபோர்டிக்கு (Rhea Chakraborty) தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரித்து வந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கும், ரியா சக்கரபோர்டிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தற்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து ரியா சக்கரபோர்டி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து மும்பையில் (Mumbai) உள்ள சித்தி விநாயகர் கோயிலில் (Siddhivinayak Temple), ரியா சக்கரபோர்டி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

ரியா சக்கரபோர்டி ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரில் கோயிலுக்கு வந்து சென்றுள்ளார். கோயிலில் இருந்து கிளம்பும்போது, அங்கிருந்த குழந்தைகளுக்கு அவர் பணம் கொடுத்துள்ளார். காரில் அமர்ந்து கொண்டே அவர் குழந்தைகளுக்கு பணம் கொடுத்த காட்சிகளை சமூக வலை தளங்களில் தற்போது பரவி வரும் வைரல் வீடியோவில் நம்மால் காண முடிகிறது.
கோயிலுக்கு வந்து செல்ல ரியா சக்கரபோர்டி பயன்படுத்திய ஜீப் காம்பஸ் சற்று விலை உயர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 32.41 லட்ச ரூபாயாக உள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) உள்ளிட்ட கார்களுடன் ஜீப் காம்பஸ் போட்டியிட்டு வருகிறது.
ஜீப் காம்பஸ் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 170 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் முன்பு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் ஜீப் காம்பஸ் காரில் தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்கள் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டன. இருப்பினும் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது பிரீமியமான கார் என்பதால், இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது. நடிகர்கள் சயீஃப் அலி கான் (Saif Ali Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar) மற்றும் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) ஆகியோரிடமும் ஜீப் காம்பஸ் கார் உள்ளது.


Click it and Unblock the Notifications








