ஒரே காரை மறுபடியும் மறுபடியும் வாங்கறாங்க... அவங்களா இது... காரோட விலையை கேட்டா அதானியே ஆடி போயிடுவாரு...

மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரிச்சா சதா (Richa Chadha). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-Benz GLE) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.

மெர்சிடிஸ்-பென்ஸ் டீலர்ஷிப் ஊழியர்கள், நடிகை ரிச்சா சதாவின் வீட்டிற்கே வந்து இந்த சொகுசு எஸ்யூவி காரை டெலிவரி செய்து விட்டு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வைரல் புகைப்படங்கள் (Viral Pics), சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகின்றன.

Richa Chadha Buys Mercedes-Benz GLE

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஒன்றாகும். அதிகபட்சமாக 330 ஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 375 ஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷனும், இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.

Richa Chadha With Mercedes-Benz GLE

இவற்றுடன், இந்த காரின் ஏஎம்ஜி (AMG) வெர்ஷனில், 435 ஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Turbocharged Petrol Engine) ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இதன் டீசல் மாடலின் விலை (Price) 96.40 லட்ச ரூபாய் ஆகவும், பெட்ரோல் மாடலின் விலை 1.10 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இதன் ஏஎம்ஜி வெர்ஷனின் விலை 1.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இந்த அதிக விலைக்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகளும், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Features) காரில் வழங்கப்படுகின்றன. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இது நடிகை ரிச்சா சதா வாங்கியுள்ள 2வது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் ஆகும். இதற்கு முன்பாக அவரிடம் ஏற்கனவே ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரை 2வது முறையாக வாங்கியுள்ளதால், இது இந்த கார் மீது, நடிகை ரிச்சா சதா கொண்டுள்ள ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. இந்த கார் நடிகை ரிச்சா சதா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சொகுசான பயணத்தை வழங்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 9, 2024, 13:42 [IST]
English summary
Richa chadha buys mercedes benz gle luxury suv all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+