பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொளுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

பெட்ரோல் போடுவதற்கு தாமதம் ஆக்கியதால் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரனால் பெரும் விபத்து நிகழ நேர்ந்தது. அதிஷ்ட வசமாக ஒருவர் மட்டுமே தீக்காயமடைந்தார்.

By Balasubramanian

பெட்ரோல் போடுவதற்கு தாமதம் ஆக்கியதால் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரனால் பெரும் விபத்து நிகழ நேர்ந்தது. அதிஷ்ட வசமாக ஒருவர் மட்டுமே தீக்காயமடைந்தார். இச்சம்பவம் எவ்வாறு நடந்தது, ஏன் நடந்தது, இதற்கு முக்கிய காரணம் யார் என்பதை நாம் இந்த செய்தியில் பார்ப்போம்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த வினித் என்பவர் தனது நண்பர் திலிப் என்பவருடன் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு ரூ 2,000 ருபாய் நோட்டை கொடுத்துள்ளனர்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

அப்பொழுது அப்பகுதிக்கு மற்றொருவர் ஒரு ஸ்கூட்டரில் வந்து அடுத்ததாக பெட்ரோல் போடுவதற்கு காத்து கொண்டிருந்தார். அவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர் வினித்திடம் ரூ 2000 நோட்டிற்கு பெட்ரோலுக்கான விலை போக மீதியை ரூ 10 நோட்டாக வழங்கியதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

இதனால் இவர்களுக்கு அடுத்தாக காத்திருந்தவருக்கு பெட்ரோல் போட அதிக நேரம் ஆனது. இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வினித் தனக்கு வழங்கப்பட்ட பாக்கி தொகையை எண்ணிக்கொண்டிருந்தார். இவர்களின் வாக்குவதாம் முற்றியது.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில் ஸ்கூட்டரில் வந்தவர் தனது பைக்கில் வைத்திருந்த ஒரு லைட்டரை எடுத்து, பெட்ரோல் பம்பிற்கு அருகே ஏற்கனவே ஒரு பெட்ரோல் பிடித்து வைத்திருந்த ஒரு பாட்டிலை எடுத்து அவரை தீ வைத்து விடுவதாக மிரட்டினார். இதையடுத்து அவர் தீலிப் அவரை சமாதானம் செய்ய முயற்சித்து அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை வாங்கி அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வழங்கினார்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

ஸ்கூட்டரில் வந்த நபர் தொடர்ந்து வாக்கு வாதம் செய்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்த பெட்ரோலை பிடிங்கி திலிப் மீது அதை ஊற்றி அவர் கையில் வைத்திருந்த லைட்டரால் அதை தீப்பிடிக்க வைத்தார். இதனால் தீ உடலில் தீ பரவியது. அவரது கரிஷ்மா பைக்கும் தீக்கிரையானது.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

இதையடுத்து திலீப் அப்பகுதியில் இருந்து ஓடினார். தீப்பிடித்த பகுதியில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திசையில் ஓடினர். தொடரந்து திலிப்புடன் வந்த வினித் தீலிப் மீது தீ வைத்த வரை பிடித்து அடித்து அங்கிருந்த செங்கலை கொண்டு தாக்கினார். பின்னர் தனது நண்பனை திலீப்பை காப்பாற்ற சென்றார்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

திலீப் மீது தீ வைத்த நபர் அங்கிருந்தது எழுந்து தனது பைக்கை எடுத்து கொண்டு சென்று விட்டார். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் செய்வது அறியாது திகைத்து கொண்டிருந்தனர். அதன் பின் மற்றவர்கள் தீபிடித்ததன் வீபரீதத்தை உணர்ந்து உடனடியாக தீயை அனைத்தனர்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

தீக்காயம் ஏற்பட்ட தீலீப் தற்போது 25 சதவீத தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை நீங்கள் கீழே காணலாம்.

பெட்ரோல் பங்கில் நெருப்பை ஏற்படுத்தும் பொருட்களை வைத்திருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். தவறு முழுவதும ஸ்கூட்டரில் வந்தவர் மீது உள்ளது. அவர் தன்னிடம் இருந்த லைட்டரை பற்ற வைத்து எதிரானவர் மீது தீபற்ற வைக்க முயற்சி செய்ததும் இல்லாமல் அருகில் இருந்த அனைவரது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் இருந்துள்ளார்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

அதேபோல பெட்ரோல் பங்கில் நேரடியாக வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் மட்டும் பெட்ரோல் பிடிக்க வேண்டும். மாற்றா இவ்வாறு தனியாக பாட்டிலில் பெட்ரோல் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பிடித்து வைக்கப்பட்ட பெட்ரோலை மற்றவர்கள் எடுக்க முடியாத அளவிற்கும், எளிதில் தீ பிடிக்கக்கூடிய ஆபத்து இல்லாத பகுதிக்கும் உடனடியாக மாற்ற வேண்டும்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

இந்த சம்பவத்தில் பெட்ரோலை பிடித்து பெட்ரோல் பம்பின் அருகிலேயே வைத்திருந்திதால் தான். ஸ்கூட்டரில் வந்தவர் எளிதாக பெட்ரோல் பாட்டிலை எடுத்து இந்த சம்பவத்தை நிகழ்த்திவிட்டார். சம்பவத்தை நிகழ்த்தியவர் அவராக இருந்தாலும், அந்த சம்பவம் நடக்க முக்கிய காரணம் பெட்ரோல் பங்க் ஊழியர்களின் கவனக்குறைவு தான்.

பெட்ரோல் போட தாமதம் ஆனதால் இளைஞரை தீவைத்து கொழுத்திய கொடூரன்..! அதிர்ச்சி வீடியோ

அரசும் பெட்ரோலை நேரடியாக டேங்கில் போடுவதை தவிர மற்ற முறையில் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதன் மூலம் இவ்வாறான தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும். அதே போல சில கலவரங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதும் இது போன்ற பாட்டிலில் அடைக்கப்பட்ட பெட்ரோல்களால் தான். அதையும் கருத்தில் கொண்டு அரசு இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2018, 14:43 [IST]
English summary
Hero Karizma rider set on fire in petrol bunk for delay in tendering change: Caught on CCTV. Read in Tamil
மேலும்... #விபத்து #accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+