இந்தியாவிலேயே முதல் ஆளாக லம்போர்கினியின் அந்த கார் மாடலை வாங்கிய தொழிலதிபர்.. இவரை யாருனு தெரியுதா?
இந்தியாவில் யாருமே பயன்படுத்தாத லம்போர்கினியின் குறிப்பிட்ட சூப்பர் கார் மாடலை பிரபல தொழிலதிபர் ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருக்கும் அந்த கார் மாடலை பற்றியும், அதன் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் முகேஷ் அம்பானி குடும்பத்தினரே அரிய வகை சூப்பர் கார்களை பயன்படுத்தி வருவதாக நம்மில் ஒரு சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இவர்களைத் தாண்டி இன்னும் பலர் இந்தியாவில் யாரும் அறிந்திராத அரிய வகை கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப் போனால் இவர்தான் இந்தியாவிலேயே இந்த காரை பயன்படுத்தி வரும் முதல் நபர் என கூறும் அளவிற்கும் ஒரு சிலர் மிக மிக அரிதான கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையிலேயே இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரிகாந்த் நாட்டிலேயே யாரும் வைத்திராத ஓர் சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரை பற்றி அறியாதவர்களுக்காக அவர் பற்றிய சிறிய விளக்கம். ரிகாந்த் என்பவர் வேறு யாருமில்லைங்க பிரபல ஈஸ் மை ட்ரிப் நிறுவனத்தின் இணை நிறுவனரே அவர் ஆவார்.
இந்த நிறுவனத்தை அவர் தொடங்கியதற்கு பின்னால் மிகப் பெரிய காரணமும், வரலாறும் உண்டு. ரிகந்தின் தந்தை அதிகம் டிராவல் செய்யக் கூடியவர் ஆவார். இவரின் பயணங்களுக்கான டிக்கெட்டை ரிகந்தே ஏஜென்டுகள் வாயிலாக புக் செய்துக் கொடுப்பார். அந்தவகையில், அவருக்கு வயது 16 இருக்கும்போது தன்னுடைய தந்தைக்காக ஓர் பயணத்திற்கான டிக்கெட்டை ஏஜென்ட் வாயிலாக புக் செய்ய போயிருந்திருக்கின்றார்.
அந்தவேளையில், டிக்கெட்டை அதன் விலையை விட கூடுதலாக 1,500 ரூபாய் அவரிடம் கேட்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு பகல் கொள்ளையில் சில ஏஜென்டுகள் செயல்பட்டதன் விளைவாகவே அவரின் ட்யூக் டிராவல்ஸ் தொடங்கப்பட்டு இருக்கின்றது. பின்னாளில் அதுவே ஈஸ் மை ட்ரிப் ஆகவும் உருவெடுத்தது.
மிடில் மேன்களின் கமிஷன் மற்றும் பெரும் தொகைக் கொள்ளையை தவிர்க்கும் பொருட்டு தொடங்கப்பட்டதே இந்த தளம் ஆகும். இந்த தளத்தை தன்னுடைய சகோதரர் நிஷாந்த் உடனேயே அவர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிசினஸ்ஸே அவர்களை இந்தியாவின் பெரும் செல்வந்தர்களாக மாற்றி இருக்கின்றது.
தற்போது அவர்களுடைய சொத்து மதிப்பின் நெட்வொர்த் 7,266 கோடி என கூறப்படுகின்றது. இந்த இடத்தை அவர்கள் அவ்வளவு சுலபமாக அடையவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பல இன்னல்களுக்கு இடையிலேயே இந்த இடத்தை அவர்கள் அடைந்திருக்கின்றனர். இத்தகைய பெரும் பணக்காரரே தற்போது இந்தியாவிலேயே யாரும் பயன்படுத்தாத விலை அதிகம் விலைக் கொண்ட லம்போர்கினி சூப்பர் காரை வாங்கி இருக்கின்றார்.
லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்டே காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 4.22 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை இந்தியாவிலேயே பயன்படுத்தும் முதல் நபர் நான்தான் என்பதை அவர் பெருமையாகக் கூறி இருக்கின்றார்.
தன்னுடைய இந்த கார் கொள்முதலை அவர் தன்னுடைய லிங்கட் இன் தளத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்டே ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரையே லம்போர்கினி பயன்படுத்தியிருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 666 எச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த திறனே உலகின் தலை சிறந்த திறனை வெளியேற்றக் கூடிய காராக லம்போர்கினி உருஸ் பெர்பார்மென்டே எஸ்யூவி-யை மாற்றியிருக்கின்றது. இதுபோன்ற அதீத திறனை வெளிப்படுத்தும் வசதி மற்றும் லக்சூரி அம்சங்களை தாங்கி இருப்பதாலுமே இந்த காரை ரிகாந்த் வாங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் சென்ற ஆண்டின் இறுதியிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையிலேயே இதன் முதல் யூனிட்டை முதல் நபராக ஈஸ் மை ட்ரிப்-இன் இணை நிறுவனர் தற்போது வாங்கி இருக்கின்றார். ஆகையால், இந்தியாவே பேசும் நபராக அவர் தற்போது மாறி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









