திருப்பாச்சி விஜயாக மாறிய பிரபல மனிதர்! பெரிய ஆளா இருந்தாலும் தங்கச்சியோட புது வண்டி பூஜைக்கு வந்துட்டாரு!

இந்தியாவில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரும் கூட, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர்.

ஆனால் ரிங்கு சிங் (Rinku Singh) சற்று வித்தியாசமானவராக உள்ளார். அவர் தற்போது தனது சகோதரிக்கு (Sister) பரிசு ஒன்றை அளித்துள்ளார். அது மிகவும் எளிமையான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். ரிங்கு சிங் தனது தங்கைக்கு பரிசாக வழங்கியிருப்பது ஹீரோ விடா வி1எக்ஸ்2 (Hero Vida V1X2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rinku Singh Gifts Sister A Hero Vida V1X2

இந்த தகவலை, ரிங்கு சிங்வின் சகோதரி, தனது _neha_singh_0700 என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில், வெளியிடப்பட்டுள்ள வைரல் வீடியோவில் (Viral Video), ரிங்கு சிங்கின் குடும்பத்தினர், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பூஜை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பூஜையில் ரிங்கு சிங்கும் கலந்து கொண்டுள்ளார்.

ரிங்கு சிங் தனது சகோதரிக்கு பரிசாக வழங்கியுள்ள ஹீரோ விடா வி1எக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை வி1எக்ஸ்2 ப்ளஸ் (V1X2 Plus) மற்றும் வி1எக்ஸ்2 கோ (V1X2 Go) ஆகியவை ஆகும்.

Rinku Singh Sister

இதில், வி1எக்ஸ்2 ப்ளஸ் வேரியண்ட் விலை 1.10 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் வி1எக்ஸ்2 கோ வேரியண்ட்டின் விலை 99,490 ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ஹீரோ விடா வி1எக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கருதப்படுகிறது.

ஹீரோ விடா வி1எக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ளஸ் வேரியண்ட்டில் ஒட்டுமொத்தமாக 3.4 kWh திறன் கொண்ட 2 பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை கழற்றி மாற்ற முடியும். இந்த வேரியண்ட்டின் ரைடிங் ரேஞ்ச் 142 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் ஹீரோ விடா வி1எக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கோ வேரியண்ட்டில், 2.2 kWh திறன் கொண்ட ஒரே ஒரு பேட்டரி மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

இதன் ரைடிங் ரேஞ்ச் 92 கிலோ மீட்டர்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், ஹீரோ விடா வி1எக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை, வெறும் 1 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். ஆனால் வழக்கமான ஹோம் சார்ஜர் இதை செய்வதற்கு சுமார் 6 மணி நேரங்களை எடுத்து கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரிங்கு சிங் தனது குடும்பத்தினருக்கு வாகனங்களை பரிசாக வழங்குவது இது முதல் முறை கிடையாது. முன்னதாக தனது தந்தைக்கு அவர் கவாஸாகி நின்ஜா (Kawasaki Ninja) பைக்கை பரிசாக வழங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு மிகவும் விலை உயர்ந்த அதே நேரத்தில் செயல்திறன் மிக்க பைக்கை பரிசாக வழங்கிய நிலையில், சகோதரிக்கு மிகவும் எளிமையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் பரிசளித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 8, 2025, 18:23 [IST]
English summary
Rinku singh gifts sister a hero vida v1x2 check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+