காஸ்ட்லியான காரில் ஏர்போர்ட்டிற்கு வந்தது அவரா! இந்த காரை எல்லாம் வாங்கறதுனா அம்பானியே 2, 3 டைம் யோசிப்பாரு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் (Rishabh Pant). இவர் பயங்கரமான சாலை விபத்தில் சிக்கி மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்றது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் ரிஷப் பண்ட் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) ஆகும். இது இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று. அமிதாப் பச்சன், பஹத் ஃபாசில், கரீனா கபூர் மற்றும் மம்முட்டி உள்பட பல்வேறு பிரபலங்களும், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 90, 110 மற்றும் 130 ஆகிய வேரியண்ட்களில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Rishabh Pant Buys Land Rover Defender 110

இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 97 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.35 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் பெட்ரோல், 5.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் உள்ளிட்ட இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன. இந்த அனைத்து இன்ஜின் ஆப்ஷன்கள் உடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

Land Rover Defender 110

10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மெரிடியன் பிரீமியம் ஸ்பீக்கர், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஸன், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் என லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பாகவே கருதப்படுகிறது.

ரிஷப் பண்ட் தற்போது வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 110 வேரியண்ட் ஆகும். இந்த காரில் மும்பை விமான நிலையத்திற்கு ரிஷப் பண்ட் வந்த வீடியோ, யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ரிஷப் பண்ட்டின் ரசிகர்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு காலத்தில் மிகவும் சாதாரணமான ஹூண்டாய் ஐ20 கார்தான், ரிஷப் பண்ட்டின் கனவு காராக இருந்தது. ஆனால் தற்போது மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் ரிஷப் பண்ட் வாங்கி குவிக்க தொடங்கி விட்டார். உண்மையில் ரிஷப் பண்ட்டின் கார் கலெக்ஸன் மிகவும் பெரியது.

தற்போது வாங்கியுள்ள லேண்ட் ரோவர் டிஃபெண்டர் தவிர, ஆடி ஏ8, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் மற்றும் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி என பல்வேறு கார்களை ரிஷப் பண்ட் வைத்துள்ளார். வரும் காலங்களில் ரிஷப் பண்ட் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை வாங்குவார் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 23:53 [IST]
English summary
Rishabh pant buys land rover defender 110 viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+