சீனா என்ன அமெரிக்க ராணுவமே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது! முக்கியமான ஆயுதத்தை சோதனை செய்த இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தினர் நேற்று "ரைசிங் சன் பிரமோஸ்" என்ற நீண்ட தூர தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர் இதன்படி இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இனி இந்தியா நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்ட நாடாக மாறி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய ராணுவம் என்பது உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாக இருக்கிறது. அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்திய ராணுவமும் அதிக ஆயுத பலம் நிறைந்த ராணுவப்படையாக மாறி, எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய ராணுவத்திடம் தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஆயுதங்கள் புதிதாக கொண்டு வருவதும் பழைய ஆயுதங்களை மாற்றுவதும் நடந்து கொண்டே இருக்கும்.

rising sun brahmos

இப்படியாக இந்தியா ஏவுகணை ஆயுத தொழில்நுட்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா உடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை தயாரித்து வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது, இந்த ஏவுகணையை முதலில் இந்திய ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து தயாரித்தாலும் தற்போது இந்த ஏவுகணையை இந்தியா தன்னிச்சையாக தயாரிக்கும் வல்லமையை பெற்ற நாடாக மாறி வருகிறது. இதில் பல்வேறு விதமான வேரியன்ட்களையும் உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் இந்த பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய வேரியன்டான ரைசிங் சன் என்ற ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. அதன்படி அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது குறிப்பிட்ட இலக்கை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி அனைத்து வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்த ஏவுகணை தற்போது இந்திய கடற்படையிடம் சேர்க்கப்பட்டுள்ளது.

rising sun brahmos

எதிரிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வரும்போது நீண்ட தூரத்தில் எதிரிகள் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்தை சரியாக குறி வைத்து தாக்குதல் நடத்தினால், இந்த ஏவுகணை துல்லியமாக எதிரிகளை அழிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஏவுகணை மிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலியின் வேகம் என்பது நொடிக்கு 343 மீட்டர் ஆகும் அப்படி என்றால் இந்த ஏவுகணை ஒரு நொடிக்கு ஒரு கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கருதிக் கொள்ளலாம்.

இந்த ஏவுகணை சரியாக எவ்வளவு வேகத்தில் பயணிக்கும், எவ்வளவு தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் என்ற தகவல்களை பொதுவெளியில் இதுவரை இந்திய ராணுவம் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த ஏவுகணையின் சோதனையை மட்டும் வெற்றிகரமாக அவர்கள் திட்டமிட்டபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ராணுவ ரகசியம் என்பதால் இந்த தகவல் எல்லாம் வெளியே வராது.

பிரமோஸ் ஏவுகணை உலகில் வெற்றிகரமாக இயக்கப்படும் ஏவுகணைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்துதான் பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்த நிலையில் கடந்தாண்டு ரஷ்யா உக்கிரனின் இடையே நடந்த போரின் போது ரஷ்யா இந்த பிரம்மோஸ் ஏவுகணையை ஏவி உக்கரையின் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது உக்கரை நாட்டால் இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் மத்தியில் இந்த பிரமோஸ் ஏவுகணை மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இன்றும் பல அரபு நாடுகள் இந்தியாவிடம் உள்ள இந்த பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். பலர் இந்தியாவிடம் ராணுவ பாதுகாப்பிற்காக இந்த பிரமோஸ் ஏவுகணையை ஆர்டர் செய்துவிட்டனர். அந்த அளவுக்கு இந்த பிரமோஸ் ஏவுகணை பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாட்டில் ராணுவம் என்பது மிக பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எந்த விதமான தாக்குதல் வந்தாலும் பதில் தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படியான நீண்ட தூர தாக்குதலுக்கான பிரத்தியேக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 16:25 [IST]
English summary
Rising sun brahmos long range capabilities andaman nicobar
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+