கையில் கட்டுடன் காரை டெலிவரி வாங்க வந்த இவர் யாருனு தெரிதா? ஆடி கார் இருக்கும்போதே இந்த காரையும் வாங்கியாச்சு!

இந்தியாவின் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக ரிவா அரோரா வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவர் பிரபலமான குழந்தை நட்சத்திரம் மட்டுமல்ல மிகவும் வசதிப் படைத்த குழந்த நட்சத்திரமாகவும் காட்சியளிக்கின்றார். வெறும் 14 வயது மட்டுமே ஆகும் இவரிடத்தில் ஆடி க்யூ3 (Audi Q3) போன்ற விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்த குழந்தை நட்சத்திரம் மீண்டும் ஓர் புதிய கார் மாடலை தற்போது வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் இம்முறை ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். அவர் வைத்திருக்கும் ஆடி க்யூ3 சொகுசு கார் மாடலைக் காட்டிலும் பலமடங்கு விலை குறைவான கார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Riva arora buys hyundai creta

மேலும், அவர் வைத்திருக்கும் ஆடி க்யூ3 ஆடம்பர கார் மாடலானது சென்ற ஆண்டிலேயே வாங்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே மற்றுமொரு காரை புதிதாக தற்போது வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக ரிவா அரோரா கார்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ரிவா அரோரா, பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றார். குறிப்பாக 'உரி' மற்றும் 'மாம்' எனும் முக்கியமான படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இத்தகைய ஓர் குழந்த நட்சத்திரமே குடும்பத்துடன் வந்து ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரை தற்போது டெலிவரி பெற்றிருக்கின்றார். தன்னுடைய இந்த கொள்முதலை ரிவா அரோரா இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கின்றார்.

Riva arora with family

இந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா கார் மாடல் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வான எஸ்எக்ஸ்(ஓ) ( SX(0) ) வேரியண்டையே அவர் வாங்கியிருக்கின்றார். பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களை அதிகம் தாங்கிய ஓர் தேர்வே இதுவாகும்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த உயர்நிலை தேர்வில் பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, சன்ஷேட் வசதிக் கொண்ட பின்பக்க விண்டோ, பின்னிருக்கைக்கான ஹெட்ரெஸ்ட் குஷன், மெட்டல் உட்பக்க டோர் ஹேண்டில் உள்ளிட்டவையும் கிரெட்டா எஸ்எக்ஸ்(ஓ) வேரியண்டில் இடம் பெற்றிருக்கும்.

இதேபோல், நவீனகால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த தேர்வு மிக தாராளமாக தாங்கியிருக்கும். அந்தவகையில், 10.25 அங்குல ஆடியோ, வீடியோ வசதிக் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், ஸ்மார்ட் ஃபோன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி, 10.25 அங்குல டிஜிட்டல் க்ளஸ்டர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை மற்றும் ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும்.

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களை மிக மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும். இதனால்தான் பெரும் பணக்காரர்களையும் கவர்ந்த கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா காட்சியளிக்கின்றது. இதற்கு சான்றாகவே ரிவா அரோரா இந்த காரை வாங்கியிருக்கும் நிகழ்வு அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவில் இந்த கார் ரூ. 11 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் ஆரம்ப விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 20.30 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் இந்தியாவில் மொத்தமாக மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒன்று டீசல் ஆகும்.

1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும். இந்த மோட்டார்களுடன் மேனுவல், ஐவிடி, ஆட்டோமேட்டிக் மற்றும் டிசிடி என பலதரப்பட்ட கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மோட்டாருக்கு ஏற்ப கியர்பாக்ஸ் தேர்வுகள் மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய தரமான காரையே ரிவா அரோரா தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். இவரிடத்தில் இருக்கும் ஆடி க்யூ3 இதை பலமடங்கு அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடியது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்த கார் மாடலின் விலை ரூ. 44 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். குறிப்பாக, ரிவா அரோரா வாங்கியிருப்பது 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரைக் கொண்ட க்யூ3-யையே வாங்கியிருக்கின்றார். இது அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாக சந்தையில் இருக்கின்ற போதிலும் இதற்கு கிடைக்கும் டிமாண்ட் என்பது இப்போதும் குறையாமல் தென்படுவது பலருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, ரிவா அரோரா போல பிரபலங்கள் மத்தியிலும் இந்த காருக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 12:35 [IST]
English summary
Riva arora buys new hyundai creta after audi gift
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+