மனைவி விவாகரத்து வாங்கன உடனே மெழுகு சிலை மாதிரி அடுத்த ஆளை பிடிச்சுட்டாரு! கோடி ரூபா காரில் வந்தது அவங்களா!
இந்தியாவில் பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது சமீப காலமாகவே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு சில விவாகரத்து வழக்குகள் நாட்டையே கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. அப்படி இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு விவாகரத்துதான் கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) மற்றும் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma) ஆகியோர் இடையேயான பிரிவு. இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். அப்போது ஜீவனாம்சமாக (Alimony) கிடைக்கும் பணத்திற்காகதான் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பெறுகிறார் என சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் தனஸ்ரீ வர்மா அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளவே இல்லை. இந்த சூழலில் அவரது முன்னாள் கணவரான யுசுவேந்திர சஹால் தற்போது ஐபிஎல் (IPL) தொடரில் பிஸியாக உள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்காக அவர் விளையாடி கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் யுசுவேந்திர சஹாலை பற்றிய கிசுகிசு ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. யுசுவேந்திர சஹாலும், ஆர்ஜே மஹ்வசும் (RJ Mahvash) காதலிக்கின்றனர் என்பதுதான் அது. ஆர்ஜே மஹ்வஸ் மிகவும் பிரபலமான ரேடியோ ஜாக்கி (Radio Jockey) ஆவார். இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) காரில், ஆர்ஜே மஹ்வஸ் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த கார் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை எக்ஸ்டிரைவ் 20 எம் ஸ்போர்ட் (xDrive 20 M Sport) மற்றும் எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் (xDrive 20d M Sport) ஆகியவை ஆகும். இதில், முதலாவது வேரியண்ட்டின் விலை 75.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுதான் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதே நேரத்தில் 2வது வேரியண்ட்டின் விலை 77.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுதான் இந்த காரின் டாப் வேரியண்ட் ஆகும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆரம்ப நிலை மற்றும் டாப் வேரியண்ட்களின் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமாராக முறையே 88 லட்ச ரூபாய் மற்றும் 92 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.
மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, பிரபல நடிகர் பிரபாஸ் (Prabhas), தமிழில் பராசக்தி (Parasakthi) திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ரீ லீலா (Sreeleela) மற்றும் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா (Nushrratt Bharuccha) போன்ற பிரபலங்களிடம் எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் இருக்கிறது.
அத்துடன் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவரும், தொலைக்காட்சி பிரபலமுமான பழைய ஜோக் தங்கதுரையிடமும் (Palaya Joke Thangadurai) கூட, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் உள்ளது. இவர் இந்த காரை வாங்கிய சந்தோஷத்தில், ஏழை குழந்தைகளை அழைத்து கொண்டு, ஜாலியா ஒரு ரவுண்ட் அடித்தது இங்கே குறிப்பிடத்தக்கது. தங்கதுரையின் இந்த செயலுக்கு, அந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு, செயல்திறன், தொழில்நுட்பம் என அனைத்தும் கலந்த ஒரு லக்ஸரி எஸ்யூவி (Luxury SUV) காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள செல்வந்தர்களுக்கு, ஆர்ஜே மஹ்வஸ் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மிகவும் ஏற்றதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








