ஒரு காலத்தில் ஆர்ஜே-வாக கொடிக்கட்டி பறந்தவர்... கணவர், மகன் உடன் பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ காருக்கு ஒனர்!

இன்றைய காலத்தில் வீடியோ ஜாக்கிகள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளனரோ அதே அளவிற்கு ஒரு காலத்தில் ரேடியோ ஜாக்கிகள் பிரபலமாக இருந்தனர். அதாவது, ரேடியோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள். இன்னும் சொல்லப்போனால், இன்றைய காலத்தில் டிவி சேனல்கள் அதிகரித்துள்ளதை போலவே, அவற்றை தொகுத்து வழங்குபவர்களும் அதிகரித்துவிட்டனர். ஆனால், ஒரு சமயத்தில் நாடு முழுவதுமே விரல்விட்டு எண்ணிவிட கூடிய அளவில் குறைவான ஜாக்கிகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர்.

அவ்வாறு, தமிழ்நாட்டில் பிரபலமான ரேடியோ ஜாக்கிகளாக ஆர்ஜே சுசித்ரா, ஆர்ஜே சிவா, ஆர்ஜே பாலாஜி என சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோன்று, கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கி, ஆர்ஜே ரேணு (RJ Renu) ஆவார். ஆரம்பத்தில் கிளப் எஃப்.எம்-இல் பணியாற்றிவந்த ஆர்ஜே ரேணு, அதன்பின் ரேடியோ மிர்ச்சியில் வேலைக்கு சேர்ந்தார்.

rj renu buys bmw x1

ரேடியோ மிர்ச்சியில் இவர் தொகுத்து வழங்கிய 'மார்னிங்ஸ் வித் ரேணு' நிகழ்ச்சி கத்தார் நாட்டில் பஹ்ரைனில் காலை நேரங்களில் ஒலிப்பரப்பப்பட்டது. பின்னர், ரேடியோ ஜாக்கியாக இருந்து வீடியோ ஜாக்கியாக மாறியவருக்கு, ஆசியன்நெட், மாத்ருபூமி என கேரளாவின் டிவி சேனல்களில் வாய்ப்புகள் குவிந்தன. பிறகு, விளையாட்டு சேனல்கள் பக்கமும் ஆர்ஜே ரேணு சென்றார்.

ஜியோ சினிமா (Jio Cinema)-இல் பணியாற்றிய ஆர்ஜே ரேணு தான் 2022-23 ஐபிஎல் ஏலத்தின் போது தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இத்தகையவர், குடும்பத்துடன் புதியதாக பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்கி உள்ளார். கணவர் மற்றும் மகனுடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (X1) காரை ஆர்ஜே ரேணு டெலிவிரி பெறும்போது வீடியோ இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ளது.

rj renu buys bmw x1

பிறந்த நாளை முன்னிட்டு இந்த புதிய பிஎம்டபிள்யூ கார் கணவர் ஜோசப் ஜபின் அவர்களால் மனைவி ரேணு ஜபினுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த இன்ஸ்டா பதிவின் மூலம் ஆர்ஜே ரேணு வாங்கியிருப்பது, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் 18டி எம் ஸ்போர்ட் (18d M Sport) என்கிற டீசல் வேரியண்ட் என்பதை அறிய முடிகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.53.80 லட்சமாக உள்ளது. இதில், 2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 147.51 பிஎச்பி மற்றும் 360 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஸ்டோர்ம் பே மெட்டாலிக், அல்பைன் வெள்ளை, ஸ்பேஸ் சில்வர் மெட்டாலிக், போர்டிமோ ப்ளூ மற்றும் பிளாக் சாப்பையர் மெட்டாலிக் என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி, 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பிஎம்டபிள்யூ கார்களுள் ஒன்றாக எக்ஸ்1 விளங்குகிறது. இத்தகைய காரை டீசல் என்ஜின் உடன் வாங்கியிருப்பதன் மூலம் பிஎம்டபிள்யூ கஸ்டமர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆர்ஜே ரேணு இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 22:20 [IST]
English summary
Rj renu takes delivery of bmw x1 luxury car with family
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+