கருப்பு, வெள்ளை காலத்து சாலை விபத்துகள்: அரிய புகைப்படங்கள்!
வாகனப் பெருக்கம், போக்குவரத்து விதி மீறல்கள் என இப்போது சாலை விபத்துக்கள் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், வாகனங்கள் என்று தோன்றியதோ, அது முதலே வாகன விபத்துக்களும் தொன்று தொட்டு நடந்து வந்திருக்கின்றன.
அவ்வாறு, கருப்பு, வெள்ளை காலத்தில் நடந்த வாகன விபத்துக்களை பற்றிய அரிய புகைப்படங்களை இங்கே வழங்குகிறோம். அமெரிக்காவில் வெளிவந்த பாஸ்டன் ஹெரால்டு டிராவலர் என்ற பத்திரிக்கையில் 1917 முதல் 1956ம் ஆண்டு வரை பணிபுரிந்த லெஸ்லீ ஜோன்ஸ் என்பவர்தான் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

டிரக் விபத்து
பாஸ்டன் நகரின் வாரன் அவென்யூ என்ற பகுதியில் தரை தளத்திற்கு அடியில் இருந்த பள்ளத்தில் 7 டன் எடையுடன் வந்த டிரக் ஒன்று கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.

சுவரை கிழித்த டிரக்
பாஸ்டன் நகரில் உள்ள கராஜின் மேல் தளத்தில் நிறுத்த கொண்டு வரப்பட்ட டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுவரை இடித்துக் கொண்டு வெளியில் வந்து தொங்குகிறது.

சோகம்...
அவர் எடுத்த சில புகைப்படங்கள் சோகத்தையும் வரவழைக்கிறது. பாஸ்டன் நகரில் பனிக்கட்டியாக மாறிய நீர் நிலையில் சென்று கவிழ்ந்து கிடக்கும் கார். அந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மீட்க முயற்சிக்கிறார்.

மரத்துடன் பின்னிய கார்
பனிப்பொழிவின்போது கண்ணாடி தளம் போன்று மாறிய சாலையில் வந்த கார் ஒன்று, வழுக்கிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதை காணலாம்.

மோதலுக்கு பின்...
மற்றொரு வாகனத்துடன் மோதி செங்குத்தாக தரையில் குத்தி நிற்கும் கார்.

வேகம் விவேகமன்று...
பெண் ஒருவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வேகமாக வந்த கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் வாயில் தளத்தில் ஏறி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஷாப்பிங்
அடுக்குமாடி வணிக வளாகத்திற்கு வந்த வாடிக்கையாளரின் கார் கட்டுப்பாட்டை இழந்து கீழ் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்களில் இறங்கி நிற்கும் காட்சி.

ஆற்றுக்குள் பாய்ந்த கார்
ஆற்றுக்குள் பாய்ந்த காரிலிருந்தவர்களை மீட்புப் படையினர் போராடி மீட்கும் காட்சி.

மரத்தில் மோதிய வாகனம்
வாகனத் துறையின் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பயணிகள் வாகனம் மரத்தில் மோதி உருக்குலைந்து நிற்கும் காட்சி.

குழம்பாதீங்க...
தீயணைப்பு வாகனத்திற்கு தண்ணீர் பிடிப்பதற்கான குழாயில் கார் மோதியதால், அது உடைந்து நீர் பீய்ச்சியடிக்கிறது. இதுபோல், அவரது புகைப்பட தொகுப்பில் அந்த கால சாலை விபத்துக்கள் குறித்த ஏராளமான பல அரிய புகைப்படங்கள் உள்ளன.
Picture credit: Caters News Agency


Click it and Unblock the Notifications








