இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிதி பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து

By Balasubramanian

இந்தியாவில் சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிதி பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது..

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் உள்ள மோசமான ரோடுகளாலும், மக்களிடம் உள்ள நிதானம் இல்லாமல் வாகனம் ஓட்டும் திறனாலும் அதிக அளவு சாலை விபத்துக்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள விபத்துக்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் மேலே சொன்ன இரண்டும் தான் மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

அந்த வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 5 லட்சம் பேர் படுகாயமடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

இந்நிலையில் சாலைவிபத்தில் பலியான அல்லது காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை மிக குறைவாக இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. இந்த தொகை தற்போது ஒருவர் போதுமான அளவு வாழ முடியாது அளவிற்கு குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

தற்போது இந்தியாவில் சாலை விபத்துக்களில் பலியானால் ரூ 50,000 மற்றும் விபத்துக்களில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ 25,000 என்றுதான் பெரும்பாலானா இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகிறது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

தற்போது இந்த உத்தரவை மத்திய அரசு வழங்கியிருந்தாலும். இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படலாம் என தெரிகிறது. வழக்கு தொடரும் பட்சத்தில் இந்த தொகையை சிரிதளவு குறைத்து உத்தரவிடும் என கூறப்படுகிறது. எனினும் மக்கள் மத்தியில் இந்த தொகையை குறைக்க கூடாது என்ற கருத்து நிலவுகிறது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

பல ஆண்டுகளாக சாலை விபத்தில் பலியான சிலரின் குடும்பம் எந்த வித பெரும் உதவியும் பாதுகாப்பும் இன்றி தங்கள் வாழ்வு தரத்தையே குறைத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை பலருக்கு ஏற்பட்டது. இனியாவது சாலை விபத்தில் யாரேனும் பலியானாலோ அல்லது காயமடைந்தாலோ குறைந்தபட்சம் அவர்களுக்கு நிதி பாதுகாப்பாவது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

இந்த தொகை கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மதிப்பீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை அப்பொழுதில் இருந்து மாற்றம் செய்யப்படாதாதால் இன்சூரன்ஸ் பணத்தால் மக்கள் பெரிய அளவிற்கு பயன் இன்றி போனது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

தற்போது மக்களின் கோரிக்கையை பரீசீலனை செய்த மத்திய அரசு நஷ்டஈடு வழங்குவதற்கான வரம்பை 10 மடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது சாலை விபத்தில் பலியானால் இனி ரூ 5 லட்சம் நஷ்ட ஈடும், விபத்தில் காயமடைந்த நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ஊனத்திற்கு ஏற்பட ரூ 50 ஆயிரத்தில் இருந்து ரூ 5 லட்சம் வரை வழங்கப்படும் என் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

மேலும் இந்த தொகையை ஆண்டிற்கு 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்தாண்டு 5 லட்சம் எனில் அடுத்த ஆண்டு அதில் 5 சதவீத தொகையான 25 ஆயிராத்தை சேர்ந்து 5 லட்சத்து 25 ஆயிரமாக தொகையை உயர்த்த உத்தரவிடப்பபட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுகான நஷ்டஈடு 10 மடங்கு அதிகரிப்பு

இந்த மாற்றம் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றப்பட்டுள்ளது. அதனால் தான் 10 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இந்த நஷ்ட ஈடு அறிவிப்பு நம் நாட்டில் வாழ குறைந்தபட்ச தொகையை கணக்கில் கொண்டே உயர்த்தப்படுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Road accident victim compensation increased 10 fold by Govt of India.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X