2015ம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் மரணம்: மத்தியமைச்சர் தகவல்

2015ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளுக்கான புள்ளிவிவரங்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவியில் வெளியிட்டார்.

By Azhagar

2015ம் ஆண்டில் இந்தியளவில் நடைபெற்ற சாலை விபத்துகளில், 1.46 லட்சம் பேர் உயிரழந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

மாநிலங்களவையில் நேற்று சாலை மேம்பாடு திட்டபணிகளுக்கான விவாதம் நடைபெற்றது அப்போது எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, 2015ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் உத்திர பிரதேசம், தமிழ் நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவில் பேசினார்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவில் தெரிவித்தன்படி, 2015ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துகளில் 51,204 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் மாநிலங்களுக்கான நெடுஞ்சாலைகளில் 40,863 பேர் மரணமடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

இந்த புள்ளிவிவரங்களை 2014ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தால், 2015ம் ஆண்டில் நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை 6,462-ஆக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியளவில் நடைபெற்ற விப்பதுக்களின் எண்ணிக்கை 1,39,671.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவதால் தான், இந்தியாவில் நடைபெறும் அதிகப்படியான சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என மன்சுக் மாண்டாவியா சுட்டிக் காட்டினார். இதை மனதில் வைத்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்வதற்கான அனுமதிகளை ரத்து செய்யவேண்டும் என அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

பல்வேறு ஊடகங்கள் வாயிலாக சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்ககூடாது என்பதை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில்,பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துகளில் தொடர்ந்து முன்னிலையில் தமிழகம்

மேலும், சுவாசத்தை சோதிக்கும் கருவிகள், டிராஃபிக் சிக்னல்களை வழிகாட்டும் கருவிகள் ஆகியவற்றை மாநில அரசுகளுக்கு தொடர்ந்து விற்பனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவையில் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Union minister mansuhk mandaviya says in 2015 road accidents in India have raised to 1.46 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X