தமிழ்நாடு தான் இதுல நம்பர் 1; இதுக்கு நாம வெட்கப்படனும் சார்!

இந்தியாவில் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் மி மோமாக மாறி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த 2023ம் ஆண்டு மொத்தம் 4,80,583 விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. விரிவாக இதை பற்றி காணலாம் வாருங்கள்.

இந்தியா அதிக மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடாக இருக்கிறது.இங்கிருக்கும் மக்கள் எல்லாம் அதிகமாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து மத்தியி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Road Accidents

இந்த ரிப்போர்ட்டின்படி இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் மொத்தம் 1,72,890 பேர் மரணமடைந்துள்ளனர். 4.6 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இது சாராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 55 விபத்துகள் நடக்கிறது மற்றும் அதில் 20 பேர் மரணமடைகிறார்கள் என கூறுகிறது.

கிட்டத்தட்ட கொரோனாவில் இந்தியாவில் எப்படி ஒரு உயிரிழிப்பு நடந்ததோ அதே அளவிற்கான உயிரிழப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த தரவுகளின்படி டூவீலரில் பயணிப்பவர்களே 45 சதவீதம் மரணமடைகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்கள் 20 சதவீதம் மரணமடைகின்றனர். நடந்து செல்வது, ஸ்கூட்டர், பைக்கில் செல்வது தான் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

Road Accidents

தினசரி பைக்கில் செல்பவர்கள், டெலிவரி தொழிலில் இருப்பவர்கள் கூலி தொழிலாளிகள் தான் அதிக அளவில் மரணமடைகிறார்கள் என இந்த ரிப்போர்ட் சொல்கிறது. மரணம் ஏற்படும் விபத்துக்களில் 3ல் 2 பங்கு அதிக வேகத்தில் வாகனத்தில் பயணிப்பது தான். ராங் சைடு டிரைவ், கண்முன் தெரியாமல் ஓவர்டேக் எடுப்பதும் விபத்திற்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் நேராக இருக்கும் சாலையில் தான் ஏற்படுகிறது. ஷார்ப்பான திருப்பங்கள், மலை பகுதிகளில் கூட விபத்து எண்ணிக்கை குறைவு தான்.

நடக்கும் விபத்துக்களில் 60 சதவீதமான விபத்துகள் தேசிய நெடுஞ்சாலையில் தான் நடக்கிறது. இதில் 68 சதவீதமான விபத்துகள் கிராப்பு பகுதியில் தான் நடக்கிறது. இந்த பகுதியில் மரணம் அதிகம் நடப்பதற்கு காரணம், மோசமான சாலைகள், விபத்து நடந்த பிறகு மருத்துவ உதவி தக்க சமயத்தில் கிடைத்தபதில் தாமதம் உள்ளிட்டவை முக்கியமான காரணமாக இருக்கிறது.

Road Accidents

இந்த விபத்துகளல் முதலிடம் பிடித்த மாநிலம் தமிழ்நாடு தான். அதிக வாகனம் இருப்பதும் சாலைகள் நெருக்கடியாக இருப்பதும் தான் இதற்கு காரணம். விபத்துகளில் மரணம் ஏற்படுவதில் உ.பி மாநிலம் தான் முதலிடத்தில் இருக்கிறது. பெரிய மாநிலமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது போல மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் அதிக விபத்துக்களை சந்திக்கும் மாநிலங்களாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விபத்துகளை தடுக்க பல அம்சங்களை வாகனங்களில் புகுத்தினாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கிறது. இதனால் நீங்கள் சாலையில் செல்லும் போது சாலை விதிமுறைகளை பின்பற்றினாலே விபத்துகள் குறையும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். விபத்துக்களை தடுக்க உங்களிடம் உள்ள யோசனைகயும் கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 31, 2025, 15:08 [IST]
English summary
Road accidents india 2023 fatalities cross 1 68 lakh report
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X