எல்லாரும் கத்தறாங்க! ஸ்கூட்டரை அடிச்சு தூக்கீட்டு பறந்த கார்! பலவீனமான இதயம் உள்ளவங்க வீடியோவ பாக்காதீங்க!

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலைகளில் அடிக்கடி மோதல்கள் (Road Rage) நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கர்நாடகா (Karnataka) மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல்கள் நடைபெறுவது என்பது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது.

இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புக்கு உள்ளான காரின் டேஷ்போர்டு கேமராவில் (Dashboard Camera) பதிவான காட்சிகள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரல் வீடியோவில் (Viral Video) அதிர்ச்சிகரமான காட்சிகளை நம்மால் காண முடிகிறது.

Road Rage

பெங்களூரில் உள்ள சார்ஜாபூர் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சிலருடன் காரில் பயணம் செய்தபோது, சாலையின் நடுவே சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை தடுத்து நிறுத்திய குழுவில் இருந்தவர்கள், ஆத்திரமாக பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அப்போது காரை தடுத்து நிறுத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கார் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார் டிரைவர் ஆக்ஸலரேட்டரை மிதிக்க தொடங்கினார். அப்போது வழியை மறித்து நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரின் மீது கார் மோதியது. மோதியதுடன் நிற்காமல் சற்று தூரத்திற்கு அந்த ஸ்கூட்டரை, கார் இழுத்து சென்றது.

Road Rage Between Car Driver And Scooter Riders

அதன்பின் ஸ்கூட்டரை விடுவித்து விட்டு, கார் தொடர்ந்து பயணிக்க தொடங்கியது. இந்த அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், இது தொடர்பாக 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

கார் மீதான தாக்குதலின்போது, குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள கும்பல் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. தாக்குதலுக்கு உள்ளான கார் தங்கள் குழுவை சேர்ந்த ஒரு பைக்கின் மீது மோதியதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகன ஓட்டிகளுக்கு இடையே இப்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மோதல்கள், கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன. இது போன்ற மோதல்களை தவிர்க்க வேண்டுமென்றால், எப்போதும் 'ரிலாக்ஸ்' ஆன மனநிலையில் இருங்கள். இனிமையான பாடல்களை கேட்பது மற்றும் ஏசி-யை ஆன் செய்து கொள்வது போன்றவற்றின் மூலம் ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்.

அதே போன்று எப்போதும் 'பாஸிட்டிவ்' மனநிலையில் இருப்பதும் நன்மை பயக்கும். அதேபோல் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். ஒருவேளை மற்றவர்கள் தவறு செய்தால், தேவையில்லாமல் அவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தவறுகளை மன்னிக்கும் மனப்பான்மை, மோதல்களை தவிர்க்க உதவி செய்யும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 14:14 [IST]
English summary
Road rage between car driver and scooter riders viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+