நட்ட நடு ரோட்டில் பெண்கள் செய்யற வேலையா இது! இந்த வீடியோவை பாத்ததும் தூக்கி வாரி போட்றுச்சு!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் சில பெண்கள் நடுரோட்டில் சண்டையிட்டு கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. சண்டிகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் சண்டிகரின் செக்டார் 34 பகுதியில் கேப் டிரைவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரது காரில் 2 பெண்கள் இருந்தனர். அப்போது மற்றொரு பெண் ஒருவர் ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காரில், ராங்-சைடில் வந்துள்ளார்.

Road Rage

இதன் காரணமாக 2 கார்களும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கேப்-ல் வந்த 2 பெண்களுக்கும், ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்த பெண்ணுக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு சற்று நேரத்தில் பயங்கரமான மோதலாக மாறியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்த பெண், கேப்-ல் வந்த 2 பெண்களையும் மிக கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் கேப் டிரைவர் தனது செல்போனில் படம் எடுத்ததாக தெரிகிறது. அந்த வீடியோதான் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது.

Road Rage Due To Accident

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்த அதே நேரத்தில், அவர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்து விட்டார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்து தகராறில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் தகராறில் ஈடுபட்ட மற்ற 2 பெண்களிடமும், காவல் துறை தரப்பில் விசாரணை நடைபெற்று கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையே சாலையில் தகராறுகள் ஏற்படுவது என்பது தற்போதெல்லாம், மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது.

கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திலேயே சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான பல்வேறு செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். மக்கள் மத்தியில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருவதுதான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் பொறுமையை கையாள்வதன் மூலமாக, மற்றவர்களுடன் பிரச்னைகளை தவிர்க்க முடியும். அதேபோல் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும், அனைவரும் முழுமையாக பின்பற்றுவதும் அவசியம். அத்துடன் எங்கு செல்வதாக இருந்தாலும், சற்று முன் கூட்டியே கிளம்பி விடுங்கள். பதற்றம் மற்றும் அவசரத்தில் மற்றவர்களுடன், தேவையில்லாமல் தகராறுகளில் ஈடுபடுவதை இது தடுக்கும்.

Article Published On: Thursday, August 24, 2023, 23:57 [IST]
English summary
Road rage due to accident 3 women fight viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+