ஹுரோ ஹோண்டா சிபிஇஸட் பைக் மீது ஏறிய 20,000 கிலோ எடையுள்ள ரோட் ரோலர்: நடந்தது என்ன?

ரோட் ரோல்லரை அதிகபட்சம் தார் சாலையை சமநிலைப்படுத்ததான் பயன்படுத்துவார்கள். ஆனால், இங்கு ஒரு நபர் வித்தியாசமாக வாகனத்தின் உறுதித் தன்மையை சோதிக்க ரோட் ரோலர் வாகனத்தை வித்தியாசமாகப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்த, விடியோவை பிளேட் எக்ஸ்ஒய்இஸட் என்னும் யுடியூப் சேனல் எடுத்து வைரலாக்கி உள்ளது.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

நன்றாக இயங்கக்கூடிய ஹுரோ ஹோண்டா சிபிஇஸட் பைக்கை ஒரு இளைஞர் ஓட்டி வருகிறார். பின்னர், அந்த இளைஞர் சிறிது நேரம் பைக் பற்றியும் தான் எதற்காக இந்த சோதனையை மேற்கொள்ளகிறார் என இன்ட்ரோ கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து, அந்த பைக்கை ரோட் ரோலர் முன்பக்கமாக நிறுத்துகிறார்.

முன்னதாக பைக்கை முட்டிக் கீழே தள்ளியே ரோட் ரோலர், அதன் மீது ஏற முயற்சித்தது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை மேலே ஏற முயற்சித்தும், முடியாமல் பின் வாங்கியது. பின்னர், சற்று பின்னோக்கிச் சென்ற அந்த ரோட் ரோலர் சற்று வேகமாக வந்து பைக் மீது ஏறியது. அப்போது, அந்த ஹுரோ ஹோண்டா சிபிஇஸட் அப்பளத்தை நொறுங்கி தூள் தூளானது.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

இதைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக பைக் மீது ரோட் ரோலர் பல முறை மேலும் கீழுமாக ஏறி ஏறி இறங்கியது. அப்போது, ரோட் ரோலரின் அடிப்பகுதியில் பைக் சிக்கியது. சில முயற்சிக்கு பின்னர் பைக் வெளியே எடுக்கப்பட்டது.

அப்போது அது சிபிஇஸட் பைக் தானா என்பதுக்கூட தெரியாத அளவிற்கு நொறுங்கிக் கிடந்தது. அதன், ஹெட்லைட், சீட், அலாய் வீல்கள் உள்ளிட்டவை பல துண்டுகளாக உடைந்துகிடந்தன. இந்த சோதனையில், பைக்கின் பல்வேறு பாகங்கள் தூள் தூளாக சிதறிக்கிடந்தன. ஆனால், பைக்கின் எஞ்ஜின் பாகம் மட்டும் முழுமையாக சிதிலடையாமல் சிறிதளவு மட்டுமே சேதமடைந்து இருந்தது. அதில், எஞ்ஜின் கவசம் மேல் பகுதி மூடிகள் ஆகியவை நொறுங்கி இருந்தது.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

பைக்கின் மீது ஏறிய ரோட் ரோலரானது, சுமார் 20 மெட்ரிக் டன் (20,000 கிலோ) எடை கொண்டதாகும். இந்த வாகனம் ஒரு பாறைக் கல் மீது ஏறினால் அது நொருங்கி சிதிலமடையும் அந்த அளவு எடைக்கொண்டு. ஆனால், ஹோண்டா சிபிஇஸட் பைக் பெருமளவில் சிதிலடையாமல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் விதமாகவே ரோட் ரோலர்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஒருவேலை ரோட் ரோலர்கள் அதிவேகத்தில் செல்லுமானால், சாலையில் பெரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடம். ஆகையால், இந்த வாகனம் தார் சாலை அமைக்கும் பணியின்போது மற்ற வாகனங்களை அந்த பகுதியில் அனுமதிக்க மாட்டார்கள்.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

மேலும், இந்த சோதனையின் மூலம் ரோட் ரோலரில் பைக் சிக்கினால் என்னவாகும் என தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற விபத்தின்போது சுற்றியிருப்பவர்களுக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும் என்பதும் தெரிகிறது. இதுபோன்ற சோதனைகளை பல வளர்ந்த நாடுகள், ஒரு வாகனம் சந்தைக்கு வருவதுக்கு முன்பாகவே செய்துவிடுகின்றன.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

இதன்மூலம், அந்த வாகனத்தின் உறுதித்தன்மை அறியப்பட்டு, வரும் காலங்களில் கூடுதல் உறுதியான வாகனங்களைத் தயாரிக்கப் பயன்படும். மேலும், இவ்வாறு சோதனைச் செய்யப்படும் வாகனங்கள் முறுசுழற்ச்சிக்கு அனுப்பட்டு, அதன் மற்ற பாகங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இதன்மூலம், வாகன உதிரிபாகங்கள் வீணவது தவிர்க்கப்படும்.

சிபிஇஸட் பைக் மீது ஏறிய ரோட் ரோலர்,

மேலும், இந்த சோதனையின் மூலம், சாலையில் செல்பவர்கள் பாதுகாப்பாக செல்லவேண்டும் என்பதே இந்த செய்தியின் முக்கிய கருத்தாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Road Roller Runs Over A Hero Honda CBZ Xtreme Bike: Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X