பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்! இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இந்தியாவிலேயே முதல் முறையாக இ-பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், யாருமே எதிர்பார்த்திராத ஓர் அறிவிப்பை 2021-2022 பட்ஜெட்டில் வெளியிட்டிருக்கின்றார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே பார்க்கலாம், வாங்க.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

தமிழகத்தில் இன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்ற பின்னர் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது ஆகும். ஆகையால், ஒட்டுமொத்த நாட்டின் பார்வையுமே தமிழக பட்ஜெட்டின் பக்கம் திசை திரும்பியிருக்கின்றது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்பார்த்திராத ஓர் அறிவிப்பை வெளியிட்டு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பலரின் மனதைக் கவர்ந்துள்ளார். அதாவது, சாலை விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு ரூ. 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இந்த அறிவிப்பு பலரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக இந்தியாவிலேயே விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பட்ஜெட்டின்போது அமைச்சர் பிடிஆர் பேசியதாவது, "விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றி அமைக்கப்படும்" என்றார். இதன் வாயிலாகவே தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இத்துடன், பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும் போக்குவரத்தைச் சார்ந்தும், அத்துறைச் சாார்ந்தும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ளார். அந்தவகையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வது, ரூ. 623.59 கோடி செலவில் தமிழக போக்குவரத்து கழங்களுக்காக புதிதாக 1000 பேருந்துகள் வாங்குவது, புற வழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட அறிவிப்புகை அவர் வெளியிட்டார்.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் திட்டடத்தின் 2ம் கட்ட பணிகள் 2026க்குள் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலைத்துறைக்காக ரூ. 17,899.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவது, தமிழக போக்குவரத்துக் கழகத்திற்கு மானிய விலையில் டீசல் கிடைக்க ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவையும் 2021-22 தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இத்துடன் மிக முக்கியமான ஓர் அறிவிப்பாக, திருவள்ளூர் மாவட்டதில் மின்சார வாகன உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கின்றார். ஏற்கனவே தமிழகத்தை மையமாகக் கொண்டு ஓலா மற்றும் சிம்பிள் போன்ற மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இந்த எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் தற்போதையே தமிழக அரசு களமிறங்கியிருப்பது அது வெளியிட்டிருக்கும் பட்ஜெட் அறிவிப்பின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு பெரும் தலை வலியை ஏற்படுத்தும் ஓர் விஷயமாக மாறியிருக்கின்றது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

இதன் விளைவாக மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர். ஆகையால், மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் புதுமுக மின் வாகனங்களை நாட்டில் களமிறக்க தொடங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் மின் வாகன உற்பத்தியாளர்களைக் கவரும் முயற்சியில் தமிழக அரசு களமிறங்கியிருப்பது எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

மேலும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் அரசு ரூ. 500 கோடி கூடுதல் சிறப்பு தகவலாக அமைந்துள்ளது. இதுமாதிரியான ஓர் முயற்சியை மேற்கொண்டதன் அடிப்படையில் நாட்டில் விபத்துகள் கணிசமாக குறைந்திருப்பதாக அண்மையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

2019ம் ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4,49,002 விபத்துகளும், இவ்விபத்துகளினால் 1,51,113 பேர் உயிரிழந்தனர். கடந்த 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது கணிசமான அளவு குறைவு என மத்திய அமைச்சர் கூறினார். இதை உறுதிப்படுத்தும் வகையில் 2018ம் ஆண்டில் நடைபெற்ற விபத்துகள் பற்றிய புள்ளி விபரங்களையும் அவர் வெளியிட்டார்.

பட்ஜெட்டில் தரமான அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவாங்கனு யாருமே எதிர்பார்க்கல!

2018ம் ஆண்டில் 4,67,044 விபத்துகளும், அவற்றினால் 1,51,417 உயிரிழப்புகளும் அரங்கேறியிருக்கின்றன. இந்த தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2019ம் ஆண்டில் விபத்தும், உயிரிழப்பும் கணிசமாக குறைந்திருப்பது தெரிய வருகின்றது. ஆனால், இது மிக மிக குறைந்தளவு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான விபத்தைக் குறைக்கும் நடவடிக்கையிலேயே திமுக தலைமையிலான தமிழக அரசு தற்போது களமிறங்கியிருக்கின்றது. இது ஒட்டுமொத்த நாட்டையுமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Road safety mission will be implemented to bring accident free tamilnadu
Story first published: Friday, August 13, 2021, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X