நம்ம அஜித், விஜய் எல்லாம் இவர் முன்னாடி ஒன்னுமில்ல... உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகரின் கார்கள்!!

ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் (Robert John Downey Jr) இப்படி சொன்னால் உங்களில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. டோனி ஸ்டார்க், ஆம் அதுதான் அவரது செல்ல பெயர். அயர்ன்மேன் திரைப்படத்தில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் ஆவார். இவரது நடிப்பில் அடுத்ததாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம் திரைக்குவர உள்ளது. இந்த நிலையில், டோனி ஸ்டார்க்கிடம் உள்ள லக்சரி கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. உலகின் அதிக சம்பளம் பெறும் நடிகர் அப்படி என்னென்ன கார்களை வைத்துள்ளார்? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆடி இ-ட்ரான் ஜிடி (Audi e-tron GT): நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியரின் கார் கேரேஜில் சமீபத்தில் இணைந்த கார் இதுவாகும். டோனி ஸ்டார்க் அவரது அயர்ன்மேன் படங்களில் பரவலாக ஆடி கார்களை பயன்படுத்துவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு இவருக்கு ஆடி கார்கள் என்றாலே தனி பிரியம் உண்டு. ஆடி எலக்ட்ரிக் காரான இ-ட்ரானின் விலைமிக்க டாப் வேரியண்ட் ஜிடி ஆகும். இந்த ஆடி எலக்ட்ரிக் கார் நமது இந்தியாவிலும் விற்பனையில் உள்ளது.

robert downey jr car collections

ஃபெராரி கலிஃபோர்னியா டி (Ferrari California T): உலகின் விஐபிகள் பலரிடம் பரவலாக ஃபெராரி கார்கள் உள்ளன. இத்தாலி ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான ஃபெராரியின் கார்களை பெரும்பாலும் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் தான் அதிகமாக பார்க்க முடியும். ஆனால், டோனி ஸ்டார்க்கிடம் நீல நிறத்தில் ஃபெராரி கலிஃபோர்னியா டி கார் உள்ளது. இந்த காரில் 3.9 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Bentley Continental GT): ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை போன்று உலகின் மிக விலையுயர்ந்த கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக பெண்ட்லீ விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தின் காண்டினெண்டல் ஜிடி காரை நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் வைத்துள்ளார். இந்த காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 500 எச்பி மற்றும் 660 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

robert downey jr car collections

1965 செவ்ரோலெட் கோர்வெட்டே (1965 Chevrolet Corvette): இது ஒரு பழமையான செவ்ரோலெட் கார் ஆகும். இதனை புத்துணர்ச்சியான தோற்றத்தில் டோனி ஸ்டார்க் வைத்துள்ளார். இந்த பழைய செவ்ரோலெட் கோர்வெட்டே காரை புதிய தோற்றத்திற்கு மாற்றுவதற்கு சுமார் 300 நாட்களுக்கும் மேல் செலவிடப்பட்டதாக ஒரு பேச்சு உள்ளது. அந்த அளவிற்கு இந்த காரை பார்த்து, பார்த்து டோனி ஸ்டார்க் வடிவமைத்துள்ளார். இந்த காரின் உட்பக்கத்தில் மஷ்ரூம் லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கஸ்டம் 1970 ஃபோர்டு மஸ்டங் பாஸ் 302 (Custom 1970 Ford Mustang Boss 302): நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியரிடம் உள்ள மற்றொரு கிளாசிக் கார் இந்த ஃபோர்டு மஸ்டங் ஆகும். மஸ்டங் கார்களுள் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்த மாடல்களுள் இதுவும் ஒன்றாகும். டோனி ஸ்டார்க் வைத்திருக்கும் மஸ்டங் பாஸ் 302 காரில் பொருத்தப்பட்டிருக்கும் வி8 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 290 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

robert downey jr car collections

1972 செவ்ரோலெட் கே10 பிக்-அப் (Chevrolet K10 Pick-Up): டோனி ஸ்டார்க்கிடம் உள்ள பிக்-அப் டிரக் வாகனங்களுள் ஒன்றான இது 1972ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 50 வருடங்களுக்கும் மேல் பழமையான இந்த வாகனத்தை இப்போதும் அதே தோற்றத்தில் வைத்திருப்பது முடியாத காரியம் ஆகும். நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் இந்த வாகனத்தை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகிறார்.

அகுரா என்.எஸ்.எக்ஸ் (Acura NSX): டோனி ஸ்டார்க்கின் கேரேஜில் உள்ள ஸ்பெஷலான கார் இது எனலாம். ஏனெனில், இது முதல் அவெஞ்சர் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அகுரா கார் ஆகும். இதன் மதிப்பு ஏறக்குறைய சுமார் ரூ.75 கோடி என கூறப்படுகிறது. ஏனெனில், டைமண்ட் குவார்ட்ஸ் பிரேக் காலிபர்கள் போன்ற ஸ்பெஷலான பாகங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. இந்த அகுரா காரில் 3.5 லிட்டர் வி6 ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியரிடம் உள்ள முக்கியமான சில சொகுசு கார்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இந்த 7 கார்களில் 3 கார்கள் 1960- 70 காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த பழமையான கார்கள் ஆகும். இதில் இருந்து டோனி ஸ்டார்க் கிளாசிக் கார்களை விரும்பக்கூடியவர் என்பது தெரிகிறது. இவரது இந்த கார்களில் உங்களது ஃபேவரட் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 31, 2024, 14:47 [IST]
English summary
Robert downey jr car collections audi e tron gt to acura nsx
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X