மகளுக்காக ரோபோ ஷங்கர் வாங்கிய காரின் விலை இத்தன லட்சமா! எல்லாரையும் சிரிக்க வெச்சவரு இன்னைக்கு அழ வெச்சுட்டாரு
தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, மக்களின் மனதில் ஆழமாக இடம் பிடிக்கின்றனர். அப்படி தனது நகைச்சுவை திறன் மூலம், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ ஷங்கர் (Robo Shankar).
ஆனால் ரோபோ சங்கரின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை தற்போது கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்பட பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ரோபோ ஷங்கர் கடந்த காலங்களில் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் பழைய வீடியோக்கள் பலவும் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்த வரிசையில் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வைரல் வீடியோ ஒன்றும் சமூக வலை தளங்களில் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது ரோபோ ஷங்கர் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். Behindwoods TV யூடியூப் (YouTube) சேனலில் இந்த வைரல் வீடியோ (Viral Video) வெளியிடப்பட்டுள்ளது.
ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜா (Indraja), தனது உறவினரான கார்த்திக் (Karthick) என்பவரை, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை முன்னிட்டு, ரோபோ ஷங்கர் புத்தம் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அந்த காரில் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோதான் தற்போது சமூக வலை தளங்களில் மீண்டும் பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், ரோபோ ஷங்கர் குடும்பத்துடன் சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார் ஆகும். இந்த காரைதான், ரோபோ ஷங்கர், தனது மகள் மற்றும் மருமகனுக்கு பரிசாக வழங்கியிருந்தார்.
இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களில் ஒன்றாகும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.91 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.73 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் ஹோண்டா எலவேட் காரின் எந்த வேரியண்ட்டை ரோபோ ஷங்கர் பரிசாக வழங்கினார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஹோண்டா எலவேட் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதன் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 15.31 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், சிவிடி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹோண்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹோண்டா எலவேட் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இதில், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரோபோ ஷங்கர் தனது மகள் இந்திராஜா மீது அதிக பாசம் கொண்டவர். எனவேதான் அவரது திருமணத்தை முன்னிட்டு ஹோண்டா எலவேட் காரை பார்த்து பார்த்து வாங்கி பரிசாக கொடுத்தார். ஆனால் அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








